மலேசிய தமிழர் பிரச்சனை
உலகையே ஒரு குடையின் கீழ் காலணியாக்கி ஆட்சி செய்தது பிரிட்டன், உலகிலுள்ள பாட்டாளி வர்க்கங்களை வலுகட்டாயமாக பல்வேறு நாடுகளுக்கு வலுகட்டாயமாக அழைத்து சென்று கசக்கி பிழிந்து உழைப்பை உறிஞ்சினர், சொத்துக்கு திண்டாடி தினறி சொத்து மடிந்த கூட்டத்தை நாம் காலம் கடந்து கணக்கெடுக்கமுடியாது. அப்படி உலகம் முழுவதும் அழைத்து சென்று அடிமையாக்கப்பட்டவர்கள் தான் இன்று உலகமெல்லாம் பரவி வாழ்வதாக சொல்லப்படும் தமிழர் கூட்டம். இன்றோ தமிழகத்தில் அமர்ந்துகொண்டு நாம் 62 நாடுகளில் பரவி வாழும் தமிழினம் என்று மார்தட்டுகிறோம், ஆனால் தங்கள் மூதாதையர்கள் செத்து மடிந்த வரலாறு கூட தெரியாமல் பலர் தான் ஒரு தமிழ் இனத்தை சேர்ந்தவர் என்பதையே மறந்து வாழ்கிறார்கள் நாடு கடத்தப்பட்ட தமிழர்கள், இப்படி அயல்நாட்டில் வாழும் தமிழர்களில் கணிசமான மக்கள் தொகை உயிருக்காக புலம்பெயர்ந்த ஈழ தமிழர்களும் அடக்கம். இன்றும் தென்னாப்பிரிக்காவில மணி, ராஜா, ரவி, என்றெல்லாம் தமிழ் பெயர்கொண்ட ஆப்பிரிக்க இன இருக்கிறது. இப்படி உலகமெல்லாம் பல்வேறு இனமக்களை நாடு கடத்தி உழைப்பை உரிந்துகொண்டு, வளங்களை திருடிக்கொண்டு போட்டது போட்டபடியே விட்டுவிட்டு ஓடிவிட்டனர் வெள்ளையர்கள், அந்தந்த நாட்டு உள்நாட்டு இனத்தால் கொலை செய்பட்டது போக மீதமுள்ள மக்கள் அடிமையாகவே வாழும் நிலை நாடு கடத்தப்பட்ட இனத்தின் நிலை. எல்லைபிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் உட்பட பல்வேறு பிரிச்சனைகள் உலகெங்கும் தலைவிரித்தாடுகிறது. ஆனால் ஒன்றுமறியா அப்பாவியாகவும், தனக்கு எந்த பொறுப்புமில்லை என்று வாழ்கிறார்கள் வெள்ளையர்கள் அதோடு எலிசபத்து மகாராணியும் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் வம்ச நலனை பார்த்துக்கொண்டிருக்கிறார். இப்படி ஒரு பிரச்சனை தான் மலேசிய தமிழர் பிரச்சனை, ஆனால் இந்த பிரச்சனைக்கு இந்து மதவாத கூட்டம் மத சாயம் பூசி பல்வேறு பிரச்சனைக்கு ஆளாக்கிவிட்டது. கோயில்களை, கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் பேர்வழி என்று அலறுவது தேவையா? உரிமை பிரச்சனைக்காக போராடும் கூட்டத்திற்கு பெயர் இந்து உரிமை போர் படையா? இசுலாமிய நாட்டில் ஒரு எதிர்பெயரை வைத்துக்கொண்டு போராடினால் அவன் மதவெறியோடு துப்பாக்கியை நீட்டுகிறான். மனித உரிமை பேசும்போது மதச்சாயம் எதற்கு? மற்றபடி உரிமைக்காக போராடினால் ஆதரிக்கலாம்
Sunday, December 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தங்களுடைய கட்டுரை ஏற்புடையதாக இல்லை, உண்மை நிலவரத்தை ஆய்வு செய்தப் பிறகே நீங்கள் இக்கட்டுரையை வெளியிட்டிருக்க வேண்டும். இந்து உரிமைப் பணிப்படை எனும் ஒரு இயக்கம் தோன்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். மலேசியாவில் வாழும் சிறுபான்மை இந்துக்களின் உரிமைகளைக் காத்திட அரசு தவறி இருக்கும் பொழுது, முறையான வேண்டுகோள்களைத் தாங்கி வந்த பல மகஜர்களை அமைதியான முறையில் சமர்ப்பிக்கப்பட்டும் அதனைக் கண்டுக் கொள்ளாத அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தே அண்மையில் மலேசியத் தலைநகரில் அமைதிப் பேரணி நடைபெற்றது. மலேசிய நாட்டைப் பொறுத்தமட்டில் அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் நலனையும் உரிமைகளையும் காத்துக் கொள்வதற்கு சங்கங்களும் பல இயக்கங்களும் உள்ளன. ஆனால் மலேசிய இந்துக்களுக்கு அப்படி எந்த ஒரு இயக்கமும் முறையாக செயல்படவில்லை. நாடு சுதந்திரம் அடையும்முன் கட்டப்பட்ட ஆலயங்கள் இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட ஆலயங்கள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளன என காரணம் காட்டி உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் சுதந்திரத்திற்கு முன் கட்டப்பட்ட பள்ளிவாசல்களுக்கு மலேசிய அரசாங்கம் அந்நிலங்களை தாரை வார்த்துக் கொடுத்து விட்டது.. நீங்கள் மலேசியாவை ஒரு இசுலாமிய நாடு என்று கூறுகிறீர்கள், உங்களுக்கு எப்படித் தெரியும் மலேசியா ஒரு இசுலாமிய நாடென்று? மலேசிய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தைப் படித்திருக்கிறீர்களா? மலேசியாவில் சில இனவாததைத் தூண்விட்டு குளிர் காய்பவர்கள் இந்து உரிமைப் பணிபடையினர் அல்ல, 50 ஆண்டுகளாக ஆட்சிப் புரிந்து வரும் கட்சிகள்தான் இனவாதத்தை தூண்டிவிடுகின்றன. மலேசியா பிரிட்டிஷ்சாரிடம் சுதந்திரம் வாங்கும் வேளையில் ஒரு ஒப்பதம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதில் இந்நாடு எந்த ஒரு சமயத்தையும் சார்ந்தது அல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, அது முறையே அரசியலைமைப்புச் சட்டத்திலும் உள்ளது. திடீரென்று மலேசியா எப்படி ஒரு இசுலாமியா நாடாக மாறியது எனபதுதான் அனைவருடையக் கேள்வி. இதற்கு அரசாங்கம் மௌனம் சாதித்து வருகிறது. இந்து உரிமைப் பணிப்படையின் வேண்டுகோள்கள் அனைத்தும் இந்துக்களுக்காக மட்டும் அல்ல என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும், பேரில் இந்து என்று இருந்தாலும் அன்று அமைதிப் பேரணியில் கலந்துக் கொண்ட பலப் பேர் வேற்று மதத்தினரும் உளர். நாட்டில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே இந்து உரிமைப் பணிப்படையின் நோக்கமாகும், இதே கருத்தை முன் வைத்து ஒரு இசுலாமிய இயக்கம் தோன்றியிருந்தாலும் மலேசிய இந்தியர்கள் கண்டிப்பாக ஆதரவு தெரிவிப்பார்கள். இந்த இயக்கம் உரிமைக் குரல் கொடுத்ததும் தற்போது அரசாங்கம் பயந்து கோயில்கள் உடைப்பதை நிறுத்தியிருக்கிறது. வேதாளம் எப்பொழுது வேண்டுமானாலும் முருங்கை மரம் ஏறலாம், அதுவரை இந்து உரிமைப் பணிப்படை இயங்கும்.சொல்வதற்கு இன்னும் நிறைய ஆதரங்கள் இருக்கின்றன.. எனவே மதச்சாயம் பூசி இங்கு யாரையும் யாரும் வம்புக்கு இழுக்க வில்லை. அவரவர் உரிமைகளைத்தான் முறையாகக் கேட்கிறோம். ஒரு மலேசியன் என்ற நிலைமையில் இருந்து இங்குள்ள உண்மை நிலவரங்களை உங்களுக்குக் கூறினேன். அடுத்தமுறை மலேசியாவைப்பற்றி எழுத வேண்டும் என்றால் முறையாக ஆய்வு செய்து எழுதவும்.. நன்றி.
I may not know much about Malaysia and the reality but what is the necessity to have a name Hindu Rights Action Force(HINDRAF) if it is for all?
Post a Comment