தமிழக கருநாடக எல்லைப்பகுதியான ஓசூரிலிருந்து மடிவாளத்திற்கு தனியார் பேருந்துகளில் பயண்க்கட்டணம் ரூ.20 ஆனால் தமிழ்நாடு அரசு பேருந்தில் ரூ.27. கருநாடக வாழ் தமிழர்கள் மற்றும் வெண்கல்லூர் செல்லும் தமிழ் பயணிகள் அனைவருக்கும் ஓசூர் வந்தவுடன் தமிழ்ப்பற்றே சிறிதுமின்றி வாழும் தமிழர்களுக்குகூட திடீர் தமிழ்பற்று வந்துவிடுகிறது. ஏனென்றால் கண்ணடர்களின் இனவெறி தமிழ்ர்களின் இனவுணர்வை தட்டி எழுப்புகிறது, சிலர் அச்சத்தின் காரணமாக தமிழின உணர்வேனும் தம்மை காக்கும் என நம்புகிறார்கள். சிலர் தமிழர்களாக இருந்தாலும் கண்ணடனைப்போல பாவணை செய்கின்றனர், காரணம் தாம்மை தமிழராக காட்டிக்கொள்வதால் பிரச்சனை வருமோ என்ற கவலை. எது எப்படியோ தமிழர்கள் அனைவரும் தமிழகப்பேருந்தில் பயணம் செய்ய விரும்பினாலும் மற்ற பேருந்துகளை காட்டிலும் தமிழ்நாடு அரசுப்பேருந்துகளில் ரூ.7 அதிகமாக உள்ள காரணத்தால் மக்கள் தமிழக அரசு பேருந்துகளை தவிர்கின்றனர். முதல் முறையாக அரசு பேருந்தில் பயணிப்பவர்கள் நடத்துனரையும், அரசையும் கடுமையாக சாடுகின்றனர். எல்லைப்பகுதி என்பதாலும் கருநாடகத்தில் பேருந்து கட்டணம் அதிகம் என்பதாலும் கருநாடக அரசுப்பேருந்துகளிலேயே கட்டணம் அதிகம், ஆனால் அதைவிட தமிழக அரசு பேருந்தில் கட்டணம் அதிகமாக இருப்பது புரியாத புதிராக உள்ள்து.
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment