Monday, December 10, 2007

புகை நமக்கு பகை!

நடிகர்கள் சினிமாவில் ஸ்டைலாக புகைப்பதால் சினிமா ரசிகர்களும் பொதுமக்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவது ஒரு காரனமாக உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சர் நடிகர் விஜய்க்கு வைத்த வேண்டுகோளை ஏற்றதும் பின் முடிந்தவரை தன் ரசிகர்களை மட்டும் பார்த்துகொள்வதாக முடித்துகொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. இப்பல்லாம் நாட்டை திருத்த நடிகர்களத்தாம்பா கெஞ்ச வேண்டியிருக்கிறது. அதோடு தன்னை 5 மாநில முதலமைச்சர்களும் 150 நாடாளுமண்ற உறுப்பினர்களும் சந்தித்து புகைப்பதற்கு எதிராக விளம்பரம் செய்யக்கூடாது என வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் அதையே 8 முதலமைச்சர்கள் இதையே கடிதம் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என கூறியிருப்பது அரசாங்கம் எப்படி நடக்கிறது என்பதை காட்டுகிறது. இவர்களுக்கெல்லாம் என்னே நாட்டுப்பற்று, மக்கள் பற்று? இவனுங்கெல்லாம் மக்கள் பிரதிநிதிகளா இல்ல குடிகாரர்கள், குடிபொருள் வியாபாரிகளின் பிரதிநிதிகளா? கருணாநிதியோ ஆள்றவனுக்குத்தான் தெரியும் டாஸ்மாக் மூடுறதனால வர்ற கஷ்டங்குறாரு, இன்னும் சிலரோ புகையிலை பொருட்களுக்கு எதிரா விளம்பரம் பண்ணக்கூடாதுங்குறாங்க. பார்க்கப்போனா மக்களாட்சியே சாராயத்துலேயும், பீடி சிகரெட்டிலேயும்தான் இருக்குது போல. ஒழிக குடிமக்கள். பாதி பயலுங்க சோத்த தின்னு முடிச்சதும் சிகரெட்டு கடையிலதான் நிக்குறானுங்க...

No comments: