சிந்திப்போம்!
கோடிக்கணக்கில் வரி பனத்தை பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்களை நிர்வகிக்க அரசு செலவு செய்கிறது. ஆண்டுதோறும் பல லட்சம் இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்து வெளியே வருகிறார்கள். இவர்களின் திறமைக்கொரு வேலை கொடுத்து பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் நட்டம் யாருக்கு? வேலையில்லா பட்டதாரி மற்றும் அவர் குடும்பத்திற்கும் மட்டுமல்ல இழப்பு அரசுக்கும் இதனால் பெரும் இழப்பு என்பதை ஆள்வோர் காதில் யார் ஓதுவது?
டாட்டாவின் கனவுத்திட்டமான ஒரு லட்சத்தில் கார் திட்டம், கார் தயாராகும் முன்பே நந்திகிராமில் பலரை கொண்று குழியில் போட்டுவிட்டது. இன்னும் இந்த கனவு நனவாகி ஒரு வேளை ஓடத்துவங்கும் போது இன்னும் எத்தனை போரை கொல்லுமோ?
எங்கட நாட்டுக்காக நாங்களே போராடிக்குறோம் ன்னு சொல்ற ஈழத்தமிழ் மக்கள் போல எங்களுக்கான தேவையை நாங்களே பூர்த்தி செய்ய உழைப்போம். அந்நிய முதலாளிகளை நாட்டுக்குள் அனுமதியோம்னு , 8 கோடி தமிழன்ல எவனாவது சொல்றோமா? எந்த அரசியல் நாயாவது சொல்லுதா? ஏன்னா அவனுங்ககிட்டதானே இவனுங்க கையேந்துறானுங்க..அமெரிக்கன் கிட்ட கையேந்துற புத்தியை விடும் வரை இந்தியா வல்லரசும் ஆகாது ஒரு புன்னாக்கும் ஆகாது.
சும்மா கெடந்த சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி; இந்த கருணாநிதி மதுரை வானூர்தி நிலையத்துக்கு தேவர் பேர வப்பேன்னு சொல்ல, டாக்டர் கிருஷ்ணசாமி இம்மானுவேல் பேர வக்கனுமின்னு போராட்டம் நடத்துறதும், இந்த பிரச்சனை மறுபடி வெடிக்கும் போல இருக்குதே!
Monday, December 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment