தேசியம் என்பது முதலாளித்துவமா?
தமிழ்தேசியம் கூடாது என்றவர்கள் தற்போது தேசியமே கூடாது என்று புத்தகம் எழுதுகிறார்கள். தமிழ் தேசியம் பாசிச உணர்வை அடிப்படையாக கொண்டது என்று கூறியவர்கள் தற்போது தேசியம் முதலாளித்துவ சிந்தனை என்கிறார்கள். அப்படியானால் இவர்கள் ஏன் உலகையே முதலாளித்துவ பாசிச ஆதிக்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்க சேகுவேராவை போல நாடு தேசம் கடந்த மனிதநேயத்துடன் செயலாற்றகூடாது. இந்த கருத்துக்களை பேசுபவர்கள் அத்தகைய தேசம் கடந்த பாசிச எதிர்ப்பை முன்னிறுத்தவில்லை, இவர்கள் இந்திய தேசத்திற்குள்ளேயே ஒரு ஒன்றுபடுத்தப்பட்ட விடுதலைப்போராட்டத்தை அந்தந்த தேசிய இனங்களால் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் மற்ற அரசியல் தந்திர நகர்வுகளை மட்டும் கலந்து பேசியும் தகவல் பரிமாற்றத்தையும் செய்துகொள்கிறார்கள். இந்த போராட்ட உத்திகள் தேசிய இனங்களின் அரசியல் மற்றும் சட்டரீதியான பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டே நகர்த்துகிறார்கள் என்பதில் இருந்தே தெரியவில்லையா இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்றன இந்த தேசிய இனங்கள் பல்வேறு நிலைகளில் வேறுபடுகின்றன என்று? அப்படியிருக்க தேசியம் என்பது முதலாளித்துவ சிந்தனை என்பது தவறு, மார்க்சிய அடிப்படையானாலும் தேசியம் அவசியமாகிறது. தேசங்களை பார்க்காமல் அடிமை வளத்தை மட்டுமே பார்ப்பதற்கு பார்ப்பதுதான் உலகமயமாக்கல் அதை ஏன் எதிர்க்கிறோம், தேசிய வளங்கள் சுரண்டப்படுகிறது என்பதால் தானே? அதுமட்டுமல்ல தோழர்களே மனிதவளமும் ஒரு தேசத்தில் வளர்க்கப்பட்டு வேறு தேசத்திற்கு நாடுகடத்தப்படுகிறது. எந்த அறிவுத்திறனும் இல்லாத தமிழர்கள் உடல் உழைப்பை நம்பி வாழ்ந்த உழைப்பாளிகள் அடிமைகளாக பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அந்த நாடுகளில் இரண்டாம் தர குடிமக்களாக உரிமை மறுக்கப்படுகிற கொடுமை இன்றும் தானே நடந்து வருகிறது. இன்றோ மிகுந்த அறிவுத்திறன் கொண்ட கணினி அறிஞர்கள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்துதானே நாடு கடத்தப்படுகிறார்கள். இன்று மரியாதையுடன் அழைத்து செல்வார்கள் பின் அடிக்காத குறையாக விரட்டுவார்கள். இதுபோல ஏழைகளின் வரி பணத்தில் படித்துவிட்டு நாட்டை விட்டு ஓடுவது இந்த தேசத்திற்கு இழப்பு என்று ஏன் அடித்துக்கொள்கிறீர்கள். உள்நாட்டிலேயே வாழும் முதலாளிகளை ஏன் தரகுமுதலாளிகள் என்கிறீர்கள் வாஜ்பாயை ஏன் தேசத்துரோகி என்கிறீர்கள் எல்லாம் தேசியத்தை அடிப்படையாக கொண்டுதானே? தேசியம் கூடாதென்றால் பறவைகளைப்போல எங்கும் பறந்து வாழும் நிலையிருக்கவேண்டும் அது சாத்தியமாகாது என்று சொல்லவில்லை அனால் அதற்கான காலம் வெகுதொலைவில் இருக்கிறது.
Sunday, December 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment