அரசியலுக்கு வர ஒரு அறுகதை வேண்டாமா?
கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிப்பாடும் என்பது பழமொழி. நடிகர்கள் கட்சி கட்டுவது புதுமொழி. கக்கன், பக்தவத்சலம், காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி போண்றவர்கள் மக்கள் சேவை செய்துவிட்டு அரசியல் களம் புகுந்த காலம் மாறி, சினிமா என்னும் நிழல் உலகத்தின் வேடங்களை நம்பி நடிகர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் காலம் வந்திருப்பது முன்னேற்றமாக கருதமுடியுமா? பெரியார், அண்ணா போன்றவர்களின் காலத்தில் மக்களுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு மரியாதை இருந்தது. ஆனால் இன்று வெறும் காசுக்குத்தான் மரியாதை இருக்கிறது. பலரும் பதவி மற்றும் அரசியல் மூலம் பணம், தொழில் செய்யும் நோக்கத்துடனேயே பொதுசேவை என்ற போர்வையில் வருகிறார்கள் உண்மையிலேயே பொதுநலம் நாடுபவர்களின் குணம் என்னவாக இருக்கும் அல்லது எப்படி இருக்கவேண்டும் என்பதே மக்களின் சிந்தனைக்கு எட்டாத புதிராகிவிட்டது என்பதுதான் கவலை தரும் விசியமாகிவிட்டது. தலைமை பண்பு, கொள்கை, கட்டுபாடு, இவையெல்லாம் உள்ள ஒரு அரசியல் தலைவரை இன்று கானமுடியவில்லை. ஒரு கூட்டம் தேசிய முற்போக்கு திராவிட என்கிறது இவர்கள் தேசிய கட்சியா இல்லை திராவிடர் கட்சியா? திராவிட முன்னேற்ற கழகம் போல இவர்களும் திரு இடத்தை முன்னேற்றுபவர்களாகத்தான்(அதாகப்பட்ட்து இடத்தை வளைத்துப்போடுபவர்கள்) இருக்கிறார்கள், திராவிடர்களாயிருப்பின் எப்படி தேசியவாதியாய் இருக்கமுடியும். என்ன எழவு கட்சிகளோ தெரியவில்லை. அரசியலை எதிர்ப்பதாக சொல்லும் சில இளம் பிரபாகரர்கள் கூட இந்த கட்சியில் இருப்பதற்கு காரணம் தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பற்றோ என்னவோ, அல்லது சினிமாரவுசுகளை ரசிப்பவரோ என்னவோ. இந்த தேமுதிக தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர் கட்சிபோல அதனாலேயே இப்படி பெயர் வைக்க தெரியாமல் அல்லது தெரிந்தே மக்களை குழப்புகிறார்கள். மலேசியாவில் வாழும் தமிழரை மணந்த தெலுங்கு பெண்ணுக்குக்கூட கலைஞர் என்ன சொன்னார் என்பதைவிட இந்த தொப்புளில் பம்பரம் விட்டவர் என்ன சொல்கிறார் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது, ஏனென்றால் தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பிரிதிநிதி என்பதால்தான். யார் என்ன கேட்டு என்ன செய்ய? சிலர் பேசும் தேசியத்துக்கெல்லாம் மத்திய அரசு மரியாதையும் கொடுப்பதில்லை, கண்டுகொள்வதுமில்லை தேசிய முற்போக்கு திராவிடம் என்பதால் நாடாளுமண்றத்தில் 20 சீட்டு தமிழ்நாட்டில் 254 சீட்டு அப்படியே திராவிட மாநிலங்களின் அனுதாபம் எல்லாம் கிடைத்துவிடப்போகிறதா? எல்லாம் ஒரு அரசியல் கணிப்பு அல்லது ஆசைதான் பெயர் மூலம் இப்படி எல்லாம் நடக்குமென்று. எப்படியோ நாங்களும் மத்திய அரசுக்கு ஓட்டுக்கணக்கையும் தலைக்கணக்கையும் சேர்க்கும் கட்சிதான் என்பதை பெயர் மூலமே நிரூபித்திருக்கிறார்கள். பல பட்ங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பராகிரமத்துடன் சுட்டு வீழ்த்தியதால் அதே இமேஜை காக்க இவர் பாசிச பா.ஜ.க வுடன் கூட்டு சேர்வதே சிறப்பு அப்போதுதான் பாசிச எதிர்ப்பு பீரங்கிகள் பதில் தெரியாமல் முழிப்பார்கள்.
Monday, December 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment