Monday, December 24, 2007

கிரிக்கெட்டு என்ற தறிகெட்ட விளையாட்டு!

கிரிக்கெட் ரசிகர்கள்தான் தேசபக்தி மிகுந்தவர்கள் என்றும், மற்றவர்கள் தேச துரோகிகள் என்ற எண்ணமும் பரவலாக கானபப்டுகிறது. கிரிக்கெட்டுக்கு எதிராக பேசுபவர்கள் எல்லாம் கேனையர்கள் தேச விரோதிகள் என்று நினைப்பது, மக்களின் அறிவு வளர்ச்சியின் அளவைக்காட்டுவதாக உள்ளது. கில்லி, பில்லி கோட்டி, என கிராமங்களில் விளையாடப்படும் இந்த விளையாட்டு தற்போது பட்டிதொட்டியெல்லாம் பரவிகிடப்பதை பார்க்கும்போது நாடு எவ்வள்வு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பது புரிகிறது. சர்வதேச போட்டிகளை பார்ப்பவர்கள் இந்தியாவிற்கு எதிராகவோ, பாகிஸ்தானுக்கு ஆதரவாகவோ பேசினால் கொலை செய்யுமளவிற்கு போகிறார்கள் என்றால் இனி என்னவெல்லாம் நடக்குமே என்று அச்சமாக இருக்கிறது. இந்த வீனாப்போன கிரிக்கெட்டாலேயே இந்திய பாகிஸ்தான் பிரச்சனை தீராது போல் தெரிகிறது. உலக கோப்பை தொடங்கும் காலமும் பள்ளி இறுதி தேர்வு தொடங்கும் காலமும் ஒன்றாக வந்து பல மாணவர்களின் எதிர்காலத்தில் மண்ணைப்போடுவது இந்திய வல்லரசாகிவிடும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. கிரிக்கெட் போட்டியை கான்பதற்கு பல வீடுகளில் குடும்பமே சோறில்லாமல் காத்துகிடப்பது அருமையிலும் அருமை.

No comments: