கார்பரேட் கல்சர் என்றால் என்ன?
1. தன்மாண உணர்வு இருக்ககூடாது. அடுத்தவன் தன்மாணத்தை குத்தி கொலை செய்யவேண்டும். மணசாட்சி இருக்ககூடாது
2. சூழ்ச்சி செய்யவேண்டும். போட்டியை உருவாக்கவேண்டும்
3. தனக்கு மேல் இருப்பவன் செய்யும் எந்த தவறையும் தட்டிகேட்காமல் சொன்ன வேலையை செய்யவேண்டும்
4. தனக்கு கீழ் வேலை செய்பவனை கசக்கி பிழியவேண்டும்
5. வார்த்தை ஜாலம் பேசவேண்டும், காசைகாட்டினால் சிரிக்கவேண்டும் பெற்றுக்கொண்டதும் மறந்துவிடவேண்டும்
6. ஊர் மெச்ச கோட் சூட்டுபோடவேண்டும். அடுத்தவன் துணியை உருவவேண்டும்
7. எவனுக்காகவோ உழைத்து உழைத்து தேயவேண்டும்.
இன்று நமக்கு அறிவு இருக்கிறதோ இல்லை ஆங்கிலத்தில் வெலுத்துவாங்கவேண்டும், பித்தலாட்டம் பேச தெரியவேண்டும், இது இருந்தால் போதும் வேலை, இதுக்கு பெயர் தான் ஆட்டிடியூட், இவர்கள் விரும்பும் ஆட்டிடியூட் என்ன தெரியுமா மூடிக்கொண்டு வச்ச
வேலையை செய்யவேண்டும், கேள்விகேட்ககூடாது. எவ்வளவுதான் அறிவு இருந்தாலும் பகுத்தறிவும், தன்மாணமும் இருக்ககூடாது, அது இருந்தால் வேலை கிடையாது. இது தான் கார்பரேட் கல்சர்
திருப்பூர், ஈரோடு ஏன் அவசர அவசரமாக மாநகராட்சியாக்கப்படுகிறது?
திருப்பூர் 1990 களில் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் காலணியாக்கப்பட்டது, ஒரு சிலர் பெரும் பணமுதலைகளானர்கள், இதைக்கண்ட சிலர் உடனே தானும் கம்பெனி தொடங்கி திவாலானார்கள், தொடர்ந்து பலர் பணக்காரர்களானார்கள் பலர் ஒன்றுமில்லாமலும் போனார்கள், இந்த உண்மைகள் வெளியே வரவில்லை ஆனால் வெளிநாட்டு பணம் வந்ததும், விளைநிலங்கள் கட்டிடங்களாயின, பருத்திவளங்கள் சிறந்த துணிகளாக வெளிநாடு ஏற்றுமதியாகின. இதுவே ஈரோட்டுக்கும் பொருந்தும், மின்தறிகள், லுங்கி, போர்வைகள், ஏற்றிமதி, ஒரு குறிப்பிட்ட சமூகமே இந்த இரண்டு நகரங்களிலும் பெரும்பாண்மையாக வாழ்கிறது. ஏற்கன்வே இவர்கள் உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்தை பிடிங்கிகொண்டு அவர்களையே அவர்களுக்கு சொந்தமான நிலங்களில் அடிமையாக்கி பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். அங்குள்ள நீராதாரங்களை சாயப்பட்டரைகளால் நிறைத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்து நடுத்தெருவில்விட்டனர், வரி உயர்வு, தண்ணீர் தட்டுபாடு, ஆகாய விலையேற்றம், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விளை நிலங்களை பிரித்து ஆகாயவிலையில் விற்றனர். இப்படி சுமார் 15 ஆண்டுகளில் தலைகீழாக மாற்றப்பட்ட ஊர் தான் திருப்பூர், வெகு அண்மையில் நகராட்சியாகி வெகு விரைவிலேயே மாநகராட்சியாக்கப்படுவதின் மர்மம் என்ன? இங்கு அரசியல் தலைவர்களின் சொத்து எவ்வள்வு உள்ளது, பிணாமி பெயரில் சொத்து எவ்வளவு இருக்கிறது? எதனால் மாநகராட்சியாக்கப்படுகிறது. இதனால் உள்ளூர் பணமுதலைகளுக்கு என்ன லாபம், உழைக்கும் மக்களுக்கு என்ன இழப்பு? என்ன எழவோ ஆனால் வெகுவிரைவாக மு.க.ஸ்டாலினை அரியனை ஏற்றுவதற்கான வேலைகள் பன்முனைகளில் சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் தனிமரமாக திக்கி திண்டாடி திணறி அல்லாடி அவதியுறப்போவது என்னவோ நடக்கத்தான் போகிறது. ஆனால் திருப்பூர், ஈரோட்டு உழைக்கும் மக்களுக்கு மாநகராட்சி அந்தஸ்தால் எந்த பலனும் இல்லை.
Friday, December 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment