நமக்கு இந்திய தேசிய அரசியலில் நாட்டமில்லை, விருப்பமில்லை என்றாலும் இந்திய தேசிய அரசியல், பொருளாதார, பாதுகாப்பு விசயங்களில் கட்டுப்படுத்தப்பட்டு கிடக்கும் வரை நாம் இந்திய அரசியல் பற்றி பேசவேண்டிய அவசியம் இருக்கிறது. அன்மையில் இந்தியா என்னும் போலி தேசத்தின் கீழ் இருக்கும் பல்வேறு தேசிய இனங்களும் வெறுக்கும் நரேந்திர மோடி குஜராத்தில் மூண்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ளான், இமாச்சல பிரதேசத்தில் பாசிச பா.ஜ.க காங்கிரசிடமிருந்து ஆட்சியை கைபற்றியுள்ளது. இந்த அரசியல் போக்குகள் நமக்கு சம்பந்தமில்லாத ஏதோ வடநாட்டில் நடந்தாலும் இந்திய தேசிய அரசியலில் இந்த மாற்றங்கள் மக்களின் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும், மனக்கண்களால் ஆய்தறிந்து வாக்கள்க்காமல் மற்றவர் எந்த கட்சிக்கு ஓட்டு போடுகிறார்கள், எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பார்த்து வாக்களிக்கும் தற்குறிகூட்டம் நாட்டில் ஏராளமாக உள்ளது. அதோடு அரசியல் கட்சிகளும் ஒரு மாநிலத்தின் வெற்றியை வைத்து பல மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். தற்போதைய அடிமை மனோபாவ மக்களுக்கு ஒரு மாநிலத்தின் வளர்ச்சி மட்டுமே தெரிகிறது, அந்த மாநிலத்தின் பாசிச கொலைகளும் அக்கிரமங்களும் எவருக்கும் புரிவதில்லை. அதனால் பா.ஜ.க வின் இந்த வெற்றிகள் சமதர்ம விரும்பிகளுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கடமைகளையும் உணர்த்துகிறது. இந்த தருணம் நாம் பாசிச ஆதிக்க சக்திகளை கடுமையாக எதிர்க்கவேண்டிய நேரம் என்பதை நாம் உணரவேண்டும். அதோடு அரசியல் கட்சிகளின் முகம் எப்படி மாறப்போகுது என்பதையும் கூர்மையாக கவனிக்கவேண்டும். அநேகமாக தமிழக அரசியல் சூழல் மீண்டும் ஆட்சியை அதிமுகவிடம் கொடுக்கப்படுமோ என்ற அச்சம் வருகிறது, காரணம் திமுக வின் பலமற்ற நிலை, கருணாநிதியின் உடல்நிலை, ஸ்டாலினின் திறமையின்மை, உட்கட்சி பிரச்சனைகள், மருத்துவர் தமிழ்குடிதாங்கியின் பழையகால அரசியல் நிலைகள், மதிமுகவின் முகமிழப்பு, விசயகாந்தின் கொள்கையின்மை எல்லாம் பார்த்தால் அதிமுக வின் பணபலத்திற்கு முன் அனைவரும் என்ன செய்யபோகிறார்கள்?
Sunday, December 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment