திராவிடர் கழகம் & திராவிட இயக்க தமிழர் பேரவை யின் உண்மை முகம்!
ஏற்கனவே மார்க்சீய பெரியாரிய சிந்தனைவாதிகள் வளர்ந்து வரும் மேற்கத்திய உடை மற்றும் நுகர்வு கலாச்சாரம், தொழில்நுட்ப புரட்சி என்ற மாயைகளில் மறைந்து போய்கொண்டிருக்கின்றனர். மக்களும் இந்த மாயைகளால் கவரப்பட்டு தன்மாண உணர்வுகள் இன்றி வாழ்கின்றனர் இந்த நிலையில், பெரியார் இயக்கங்கள் என்ற போர்வையில் திராவிடர் கழகமும், திராவிட இயக்க தமிழர் பேரவையும் திமுக வின் எடுபிடிகளாகவும் திமுகதாங்கிகளாகவும் மாறிவிட்டனர். மற்றபடி சோசியலிச சிந்தனைகளில் இவர்களுக்கு நாட்டமில்லை. இயக்கங்களை ஒரு தொழிலாக நடத்தி வருகின்றனர். தி.க வோ மாறி மாறி ஆளுங்கட்சியை ஆதரித்து வந்தது, தற்போது திராவிட இயக்க தமிழர் பேரவையும் அந்த வரிசையில் ஒரு லாயக்கற்ற குதிரையை அரியனை ஏற்றுவேன் என்று கொக்கரித்துக்கொண்டிருப்பது, இவர்களின் பழைய முகத்தை கண்டு மக்கள் இவர்களை நாடி வர, அவர்களை இவர்கள் தங்களின் கொள்கையற்ற ஆளுங்கட்சி சேவகத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை தவிர வேறொன்றும் இல்லை.
Wednesday, December 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment