Monday, December 10, 2007

அரசியல்வாதிகள் எப்போது உண்மை பேசுவார்கள்?

புரட்டிலேயே இமாலய புரட்டு 2020 இந்தியா வல்லரசு ஆகப்போகிறது என்பதுதான். இதை அரசியல் கோமாளி அப்துல் கலாம் சொல்ல அது அரசியல்வாதிகளுக்கு மக்களை ஏமாற்றவும் வசதியாகவும் போய்விட்டது. இதில் முதல் கோமாளித்தனம் என்னவென்றால் மக்கள் அப்துல்கலாமின் 2020 திட்டம் ஒரு நடைமுறை சாத்தியமென நம்பி அவரை ஆகாயத்திற்கு உயர்த்தியதுதான். இந்த மாயையை மக்கள் நம்பியதும் அவரை குடியரசு தலைவராக்கியதுதான் வேடிக்கை. இவர் குடியரசு தலைவராகி என்ன சனநாயக்கத்தை தூக்கி நிறுத்திவிட்டார், என்று மீண்டும் இவரை குடியரசு தலைவராகவேண்டுமென மாணவ சமூகம் நினைத்தது என்பது தான் நமக்கு புரியவில்லை. ஒரு பாலியல் வல்லுறவு குற்றவாளியை தூக்கில் போட இவர் உத்தரவிட்டார் பின்னர் அதற்காக வருத்தப்ப்டுகிறார். அப்போதே பல மனித உரிமை அமைப்புகள் போராடினவே அது இவர் காதில் விழவில்லையா? மாணவர்கள் எதிர்கால சமுதாயத்தை தாங்கி நிற்க்ககூடியவர்கள் என்பதை அப்துல் கலாம் சொல்லித்தான் நமக்கு புரியும் என்றால் இந்தியா வல்லரசு ஆகுமா? அப்துல் கலாம் தனது துறையில் சிறந்த அறிஞர் என்பதில் நம்க்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் பொக்ரான் அனுகுண்டு சோதனை நடத்திவிட்டு இந்தியா வல்லரசு பட்டியலில் இடம் பிடித்துவிட்ட்து என்றதுதான் எப்படி என்று புரியவில்லை. பொருளாதார ரீதியாக இன்ன வளர்ச்சி கண்டிருக்கிறோம், வருமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்கள் யாருமே இல்லை, அனைவருக்கும் அடிப்படை தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் கிடைத்துவிட்டது, அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி கண்டுள்ளோம் என்றால் நாம் முன்னேறுகிறோம் என்று சொல்லிகொள்ளலாம். ஆனால் இன்று கூட அனுசக்தி தொழில்நுட்பத்திற்காக இந்தியா அமெரிக்காவிடம் கையேந்துகிறது. இத்தனை புதிய கண்டுபிடிப்புகளை நாம் கண்டுபிடித்துள்ளோம் என்றால் பெருமைபடலாம். இன்று இந்த நாடு மார்தட்டிக்கொள்வது கணிணித்துறையை காட்டித்தான், ஆனால் அதன் அஸ்திவாரமான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை யாரிடம் வாங்குகிறோம் அமெரிக்கனிடம், ஆனால் அதையே யார் உருவாக்குகிறார்கள் என்றால் இந்த நாட்டுக்காரர்கள் தான். அப்படியானால் நம் உழைப்பில் மற்றவன் வாழ்கிறான் என்றுதானே அர்த்தம். இதையே உருவாக்க எவ்வள்வு சம்பளம் கொடுக்கிறான் அதை விற்று எவ்வள்வு லாபம் சேர்க்கிறான். நம்மவர்கள் பெரிய சம்பளம் வாங்குவதையே பேசுகிறார்கள். சரி சம்பளம் கொடுப்பது எதிர்க்காக, அதுமட்டுமின்றி இவர்களை நம்பித்தான் இந்த மூத்திர கம்பனிகளான பெப்சி, கோக் எல்லாம் இயங்குகிறது, இங்கேயே பருத்தி எடுத்து, இங்கேயே செய்யப்படும் பீட்டரு இங்கிலாந்து, லூயி பில்பி போன்ற வெளிநாட்டு பெயர் கொண்ட துணிகள் விற்கப்படுகிறது. தயாராவதோ உள்ளூர் மதிப்பில் விற்க்கப்படுவதோ வெளிநாட்டு மதிப்பில், அப்ப்டியானால் யாருக்கு லாபம்? இதே போலத்தான் காலனிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், சில சமயத்தில் தள்ளுபடி, பழைய பொருட்களுக்கு, கழிவு பொருட்களுக்கு என்று, பல காலம் வைத்திருந்து தள்ளுபடியில் விற்றால் நட்டம்தானே, ஆனால் நட்டமாகிவிட்டதாக கடையை மூடிவிட்டார்களா? இல்லை, ஏனென்றால் தள்ளுபடியில் விற்றாலும் நட்டம் இல்லை, அப்படியானால் சாதாரன நாட்களில் விற்கப்பட்ட விலை ஆகாய விலைதானே? இன்றும் ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் என்று ஓர் கம்பெனி உண்டு, ஆனால் இது ஒரு பிருத்தானிய கம்பெனி, பெயரை இப்படி வைத்து ஏமாற்றுகிறான். சுமார் மூண்று ஆண்டுகளுக்கு முன்பு 2 ரூபாய்க்கு விற்ற சாம்புக்களின் விலையில் திடீரென குறைக்கப்பட்டு 1 ரூபாய்க்கு விற்கப்பட்டது, 67 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரின் வாசிங் பவுடர் 40 ரூபாய்க்கு விற்க்கபட்டது, ஒரே நாளில் இந்த மாற்றம். ஆனால் மூலப்பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை. ஏன் இந்த அதிரடி விலை குறைப்பு? இந்த கம்பெனியின் பொருட்கள் ஓட்டமில்லை, காரணம் ஆங்காங்கே முளைத்த சிறு தொழில்கள், அந்த பொருட்களின் விலை மலிவாக இருப்பதால் போட்டியை சமாளிக்க முடியாமல் தினறி இந்த முடிவுக்கு தள்ளப்பட்டனர். இதே நிறுவணங்கள் தான் சிறுதொழில் வளர்ச்சியை தடுக்க அரசை நிர்பந்திப்பவர்கள். இவர்கள் தான் எந்த ஒரு மொழியிலும் ஆங்கிலத்தை புகுத்துபவர்கள், மக்களிடம் ஸ்டேட்டஸ் என்னும் போலி கவுரவத்தை விதைப்பவர்கள். இதுவரை எந்த பெண்ணாவது பேர் அண்டு லவ்லி போட்டதால் வெள்ளையாகி இருக்கிறார்களா? அதுமட்டுமின்றி வெள்ளை நிறமென்ன உயர்வா? இப்படி ஒரு மோகத்தை வளர்க்கிறார்கள். மக்களின் ஆசையை காசாக்கிவிடுவது ஆனால் பலன் ஏதுமில்லை. பல காலம் இந்த மருந்தை பயன்படுத்தியும் பயன் இல்லை என்பது தெரிந்தும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டு சிரமப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம் வரட்டு கவுரமும், சிந்தனையின்மையும் தான். இப்படியே 2008ல் இத்தனை லட்சம் பேருக்கு வேலை என்று பொய் சொல்லி சுயநலக்கல்லூரிகள் கல்லா கட்ட காரணமானவர்கள் அரசியல்வாதிகள், ஏனெனில் கல்வி வள்ளல்களே இந்த அரசியல்வாதிகள் தான், அல்லது மாஜி அமைச்சர்கள். ஆனால் பல லட்சம் ஏழைகள் தங்கள் சொத்தை விற்று பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டு பலரும் வேலையில்லாமல் கஷ்டத்திலேயே காலம் தள்ளுகிறார்கள், காரணம் ஆங்கில அறிவு இல்லையாம். ஆனால் இந்த பண்ணாட்டு நிறுவணங்களுக்கு தேவையான போட்டி உருவாகிவிட்டது, இந்த போட்டியாலிருந்து தரமான ஆட்களை பொருக்க முடிகிறது. இதற்காகத்தான் திட்டமிட்டு மிதமிஞ்சிய அளவிற்கு ஆட்கள் தேவை என முன் கூட்டியே அறிவிப்பதெல்லாம். இப்படி மக்கள் பணம் பயனற்ற வழிகளில் செலவு செய்யப்படும்போது எப்படி பணத்திற்கு மதிப்பு இருக்கும், வல்லரசாகமுடியும்? கிராமங்கள் அழிக்கப்பட்டு உண்வு உற்பத்தியில்லாமல் எப்படி உணவு தட்டுப்பாட்டை சமாளிப்பது? குறைந்த பரப்பளவில் சன நெருக்கடி அதிகமான நாட்டில் சர்வதேச நிறுவணங்கள் கட்டிடங்களை கட்டி நிலவளங்கள், நீர்வளங்களை சீரழித்துவிட்டால் மக்கள் எப்படி வாழ்வது? அதிக பரப்பளவும் குறைந்த மக்கள் தொகையும் உள்ள அமெரிக்காவில் உள்ள நிலங்களில் ஏன் இந்த நிறுவணங்களை அமைக்கவில்லை, ஏற்கனவே இருந்த இந்திய கணிப்பொறியாளர்களை திருப்பி அனுப்பியதற்கு என்ன காரணம்? ஏன் இப்படி உத்திகளை கையாள்கிறார்கள் என்பதை சாமாண்ய மக்கள் சிந்திப்பதில்லை, இதை விவரமாய் அறிந்தவர்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை மாறாக அயல்நாட்டு எடுபிடியாகவே இருக்கிறார்கள். இதுவரை இருந்த எந்த நிதியமைச்சரும் நாட்டுக்கு நன்மை பயக்கும் பொருளாதர கொள்கையை கடைபிடிக்கவில்லை. மாறாக வெளிநாட்டின் நன்மைக்கு ஏற்ற பொருளாதார கொள்கையையே கடைபிடித்துள்ளனர், அது மைக்ரோ எக்கனாமிக்ஸ் என்ற உள்நாட்டு கொள்கையிலாகட்டும், மேக்ரோ எக்கனாமிக்ஸ் என்ற வெளிநாட்டு கொள்கையிலாகட்டும் இந்திய பொருளாதார கொள்கை சுயமுன்னேற்ற கொள்கையாகவும், தற்காப்புக் கொள்கையாகவும் இல்லை. குலோசுடு எக்கானமி எனப்படும் அந்நிய முதலீடு இல்லாமல் உள்நாட்டு உற்பத்தியிலும், உழைப்பிலும் நம்பிக்கை கொண்ட சீனாவை போன்ற கொள்கைதான் சரியானதாக இருக்கும், இதை ஈழத்தமிழ் நிருவாகிகளான புலிகள் தான் கடைபிடிக்கின்றனர். இந்திய பொருளாதாரம் தெளிவற்ற கொள்கையால் தற்போது பணத்தின் மதிப்பை கட்டுப்படுத்துவதில் சிரமத்தின் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வெளிநாட்டின் நேரடி முதலீட்டால்தான் டாலருக்கு எதிரான பணத்தின் மதிப்பு கூடியிருக்கிறது. பணத்தின் மதிப்பு கூடியதால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தொழில் ஆரோக்கியமாக இருப்பதால்தான் பெட்ரோலின் விலையைக்கூட ஏற்றாமல் சமாளிக்கமுடிகிறது. இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா என்னெயின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் பெட்ரோல் டீசல், மண்ணெணய், எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் நாட்டின் இறக்குமதியைவிட ஏற்றுமதியே அதிகமாக இருப்பதால் ஏற்றத்தாழ்வை சமாளிக்க முடியாமல் தவிக்கிறது நிதித்துறை. இதனால் ரிசர்வ் வங்கி உள்நாட்டில் உள்ள டாலரை அதிக அளவில் வாங்கிகொண்டு ரூபாயை தருகிறது, இதனால் பெரும் பணப்புழக்கம் அதிகமாகிறது, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த, பணத்தைப்பெற்றுக்கொண்டு பணப்பத்திரம் கொடுக்கப்படுகிறது. தற்போது பங்கு வர்த்தகத்தில் தீவிரவாதிகள் முதலீடு செய்திருப்பதாக கதை கட்டப்படுகிறது. இப்படி நாட்டையே திசை திருப்பி தங்கள் மணம்போல நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் நாடு எப்படி வல்லரசு ஆகப்போகிறது என்று யாரேனும் விளக்கியுள்ளார்களா? அப்துல் கலாமின் 2020 வல்லரசு கணவு நடைமுறை சாத்தியமா? அந்நிய முதலீட்டால் ஏறபடும் எதிர்மறையான விளைவுகளை அவர் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கவில்லை, பொருளாதார வளர்ச்சி என்பது சம்ச்சீராகவும், சர்வதேச வளர்ச்சிக்கு ஏற்ப்பவும் தான் இருக்கமுடியும், பெருமளவில் உலக வர்த்தகத்தை பொய்யாலும் போலியாலும் கட்டுபடுத்தி வரும் அமெரிக்காவிற்கு முன் நேர்மையான பொருட்களை தயாரித்து விற்கும் இந்தியா எப்படி அடுத்த 12 ஆண்டுகளில் வல்லரசாக முடியும். இன்றும் 30 சதவீகத்திற்கும் மேல் வருமைகோட்டுக்கு கீழே வாழும் மக்களின் அடிப்படை தேவை எப்போது நிறைவேற்றப்படுவது, சனநாயகமே கேள்விக்குறியாக உள்ள நாட்டில், சமூகநீதியையும், சமத்துவத்தையும் எப்படி நிலைநாட்டுவது? சமச்சீர் கல்வி, மருத்துவ வசதி, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, பொது சுகாதாரம், எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்கள், மாரடைப்பு போன்ற நோய்கள் இன்று சாதாரனமாகிவிட்டது. இன்னும் மத அரசியல், சாதி அரசியல், குண்டர் அரசியல், கோத்ரா, நந்திகிராம், உள்நாட்டு தீவிரவாதம் போன்ற பிரச்சனைகளை வைத்துக்கொண்டு 2020 ல் வல்லரசு என்பது கேலிக்கூத்தாகத்தான் உள்ளது. இது நிச்சயமாக மக்களை ஏமாற்றும் வேலையே. தொழில்நுட்ப புரட்சியால் இந்தியாவில் வாழும் கிராமத்து மக்களுக்கு என்ன பலன்? இப்படி யாவருக்கும் பலன் கிட்டாத ஒரு புரட்சியால் என்ன பயன்? இந்தியாவில் என்னதான் வளர்ச்சி ஏற்பட்டாலும் அதைக்காட்டிலும் பன்மடங்கு வளர்ச்சியை அமெரிக்காவும், ஐரோப்பிய யுணியனும் தங்கள் வர்த்தகத்தின் மூலமே சாதித்து வருகிறது. இவர்களின் சர்வதேச நிறுவணங்கள் உலகமெங்கும் வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டிக்கொண்டு, அதே பொருளை அந்த நாட்டிலேயே பல மடங்கு லாபத்தில் விற்றுவிட்டு லாபத்தை மட்டும் சேர்த்து அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை பெறுக்கியுள்ளது மட்டுமில்லாமல் சர்வதேச பொருளாதரத்தையே கட்டுப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா வல்லரசாகும் என்பதை நம்பமுடியவில்லை. தனி மனித வருமாணம் பெருகியுள்ளதும், முதலாளி வர்க்கம் பொருள் ஈட்டுவதாலும் அரசுக்கு பெருமளவில் வரி கிடைக்கும். எந்த நாடும் அடுத்தவன் முதலீட்டில் வளர்ச்சி கண்டுவிடமுடியாது மாறாக தங்கள் வளங்களை இழக்கும் நிலைதான் ஏற்படும். இதுதான் இந்தியாவில் நடக்கிறது. நாடு அதன் வளத்தை இழப்பது மட்டுமல்லாமல் இந்த உலகமயமாக்கலில் வாழ முடியாமல் தங்களை காத்துக்கொள்ள முடியாமல் ஏழைகள் மாண்டு போவார்கள் அதன்பின் எஞ்சியுள்ள மக்களெல்லாம் வைத்து வல்லரசு என்று சொல்லிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா? முஸ்லிம்களை கொண்று குவித்துவிட்டு இது இந்துஸ்தானாம் என்று சொல்லிக்கொள்ள நினைப்பதைப்போல? நாடு வல்லரசாவது முக்கியமா? இல்லை மனிதநேயம் முக்கியமா தோழர்களே? நன்மைக்கோ அரசியலுக்காகவோ, சில அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் செய்துவருவதை சிலர் பிரச்சனையை ஆழமாக புரிந்துகொள்ளாமல் கடந்தகாலத்தையே பேசி வருவது அரசியல்வாதிகள் சிலர் நன்மை செய்தாலும் அதை நீ செய்தால் ஏற்கமாட்டோம் என்பது போல் தெரிகிறது.

No comments: