சொத்து சேர்ப்பது குற்றமா?
தனிமனிதன் தேவைக்கு மேல் சொத்து சேர்ப்பது குற்றமாக அறிவிக்கப்படவேண்டும் என்றார் பெரியார். தனியுடமை கொடுமைகள் தீர புரட்சி செய்யடா என்றான் பட்டுக்கோட்டை. ஆனால் தனி ஒரு மனிதனுக்கு உனவில்லையேல் உலகை கொளுத்து எனக்கூறிவிட்டு காரணம் புரியாமல் கஞ்சாவோடு கரைந்தான் பாரதி. தனி மனிதன் சொத்து சேர்ப்பது தனியுடமை, உழைப்பு, வரவு என்பதெல்லாம் பொதுவாக இருக்கவேண்டும் என்பதே பொதுவுடமை இன்னும் சொல்லப்போனால் கூட்டுடமை. ஆனால் எந்த பொதுவுடமை அல்லது கூட்டுடமை கட்சிகளும் தனியுடமைக்கு எதிராக போராடவில்லை. முகேஷ் அம்பானி உலகப்பணக்காரனாம். மார்க்சிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கத்தில் மக்கள் உழைக்கும் விவசாய நிலம் வலுக்கட்டாயமாக் பிடுங்கப்படுகிறது. உழைப்பவனுக்கே நிலவுடமை என்ற தத்துவத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. மார்க்சிஸ்டு தொண்டர்களால் இளம்பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு ஆளாகிறார்கள். ஒரு பெண் பத்திரிக்கையாளருக்கு பாதுகாப்பு கொடுக்க துப்பில்லாத அரசாங்கம் எப்படி ஒரு மாநில மக்களை பாதுகாக்கும், அந்த அரசாங்கம் எதற்கு இருக்கவேண்டும்.
தனியுடமை ஆதிக்க மனோபாவத்திற்கும், அடிமை மனோபாவத்திற்கும் வழி வகுப்பதோடு சமுதாய ஏற்றத்தாழ்வு, வஞ்சினம், உழைப்பை உரிஞ்சுதல், திறமைக்கு வேட்டு என சனநாயகம், சமூகநீதி, சமுத்துவம் என்ற நாகரீக மனித வாழ்வின் அனைத்து கோட்பாடுகளுக்கும் வேட்டு வைக்கிறது. இதையேதான் மென்பொருள் நிறுவணங்களும் செய்கிறது, Divide and Rule, மக்களை தனிமைபடுத்தி சொத்து சேர்ப்பது, Segmenting people based on geographic location, sex, age,etc., இப்படி மக்களை தனித்து, பிர்த்து ஒரு குழுவாக்குவதுதான் Consumerism FMCG கம்பனிகள் இதை செய்கிறது. இந்த சாப்ட்வேர் கம்பெனிகளும் இன்று சமூகத்தில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. யாருக்கோ உழைக்கும் தமிழ் மக்களும் அந்த கலாச்சாரத்தையும், (கோட்)பாடுகளையும் தானே பின்பற்றுகிறார்கள். எனவே இப்போது மார்க்சிஸ்டுகள் என்ன செய்யவேண்டும்? அவர்களின் கட்சி பெயரை மாற்றவேண்டுமா? கொள்கைகளை மாற்றவேண்டுமா? இல்லை தலைவர்களை மாற்றவேண்டுமா?
Monday, December 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment