Monday, December 24, 2007

பண்ணாட்டு நிறுவணங்களின் நிழல் அரசாங்கம்!

சனநாயகத்தின் நாண்கு தூண்களில் ஒரு தூனும் மக்களை காக்கவில்லை। ஏனென்றால் சனநாயகம் என்னும் மேற்கூரையே இப்போது இல்லை. இப்போது தீவிரவாத வெயிலில் காயும் மக்கள், பண்ணாட்டு புயலால் மாணமிழந்த மக்கள், ஆசையெனும் மழையால் நனைந்த மக்கள், பேராசையெனும் வெள்ளத்தால் சூழ்ந்த மக்கள், அரசாங்கமெனும் அடியாட்களால் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள், அரசியல்வாதிகள் என்னும் துரோகிகளால் சுரண்டப்பட்ட மக்கள் என்றுதான் நம்மை நாம் அழைத்துக்கொள்ளவேண்டும். இன்று நம்மில் யாரும் பொய் சொல்லாத உத்தமர், நாட்டுப்பற்று கொண்ட பகத்சிங், புரட்சியாளர் அம்பேத்கர் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை, விரும்பினாலும் சொல்லிக்கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்திய துணைக்கண்டத்தில் யாரும் தன்மாணத்தோடு வாழமுடியாது. ஒட்டுமொத்த சமூகத்தையும் அமெரிக்கர்களிடமும், உலக வங்கியிடமும் அடகு வைத்தப்பின்பு, நாம் எப்படி தன்மாணத்தோடு வாழமுடியும். என்றைக்கு தனிமனிதனின் உரிமை பாதுகாக்கபடுகிறதோ, என்றைக்கு தனிமனிதன் ஆளும் வர்க்கத்தை கேள்விகேட்க முடிகிறதோ அன்றுதான் தன்மாணமும், மக்கள் சுதந்திரமும், சனநாயகமும் நிலைக்கும். அரசாங்கமே அமெரிக்க என்னும் முதலாளிக்கு வாலாட்டும்போது அடிமைகளாக வாழும் நாம் எப்படி தன்மாணத்தோடு வாழமுடியும்?

No comments: