வென்கல்லூரில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அநாகரீக உடையணிய தடை. கீழ் இடுப்பில் அணியும் ஜீண்ஸ், லோ கட், டாப்ஸ், கையில்லாத சுடிதார்கள் போன்ற அரைகுறை ஆடைகளுக்கு தடை. அத்துடன் கல்லூரி மற்றும் பள்ளிகளில் அலைபேசிகள் பயன்படுத்த தடை. மாணவர்களுக்குள் கட்டிபிடித்தல், முத்தமிடல் போன்ற செயல்களுக்கும் தடை. படிப்புக்கு தேவையற்ற இணையதளங்களுக்கு தடை, ஜீண்ஸ், டி-சர்ட்களுக்கு தடை. பள்ளி, கல்லூரி விழாக்களில் ஆட்டம் போடத்தடை. பரந்த மனசு பெண்களுக்கும், பாசமிகு பையன்களுக்கும் இத்தடையால் ஏக வருத்தம். ருசிக்க விட்டு இப்போது கட்டுபடுத்தினால் கஷ்டம்தானே பாவம். அதுசரி ஆனால் ஆசிரியைகளுக்கு சுடிதார் அனிய தடை என்பது சரியா? சுடிதாரில் என்ன ஆபாசம் என்று புரியவில்லை. மேலும் டெக் மகிந்திரா என்ற சர்வதேச நிறுவணத்தில் கடுமையான உடை சட்டம். மீறுபவர்கள் ஒருமுறை வீட்டிற்கு திருப்பி அனுப்பபடுகிறார்கல். அடுத்த முறையிலிருந்து 1000 ரூபாய் சம்பள்த்திலிருந்தே கழித்துவிடுகிறார்கள். இந்த நிறுவணம் பார்மல் டிரஸ் என வலுயுறுத்தினாலும், இது கலாச்சார விதிமுறையாகவே தெரிகிறது. ஏனென்றால் அரபு நாடுகளில் உள்ள சர்வதேச நிறுவணங்களில் கூட மினி ஸ்கர்ட் எனப்படும் குட்டைபாவடை(அதாவது விமாண பணி பெண்கள் அணியும் உடை) பார்மல் டிரஸ்ஸாகவே கருதப்படுகிறது. ஆனால் இந்த நிறுவணம் உடலங்கங்கள் தெரியாத உடைகளை வலியுருத்துகிறது. வென்கல்லூர் கவர்ச்சி இழந்து வருவது கவலையளிக்கிறது நண்பர்களே!
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment