ஈழத்து உறவுகளே!
தாய் வயிற்றில் வளரும் போது நாம் எங்கே பிறக்க போகிறோம் என்பது தெரியாது பிறந்திருப்பது ஈழத்தில் என்றாலும் தன் வாழ்வு நிலை என்ன என்பது பிறந்தவுடன் தெரியாது. ஆனால் பிள்ளை பருவத்திலேயே தம் இனத்தின் நிலையை உணர்ந்து முடிவெடுத்தான் தமிழீழ தலைவன். தமிழினத்தின் விடிவெள்ளியாய், எதிரிகள் நடுங்கும் வேங்கையாய், நம் சொந்தங்களின் சகோதரனாய், மகனாய், மண்ணை மீட்க துணிவுடன் தன் தோள்களை முன்னிறுத்தினான். தன் மக்களுக்கு மக்களாலேயே வலிமை சேர்த்தான். தன் புத்தியின் அனுக்களை முடுக்கி ஓயாது சிந்தித்தான், செயல்பட்டான். வெற்றிகள் பல கண்டான், துயரங்கள், துரோகங்களை சந்தித்தான். வெற்றிகளால் கொக்கரிக்காது, துயரங்களால் துவளாது, துரோகங்களால் அஞ்சாது, மக்களை காப்பதொன்றே கடமையாகக் கொண்டான். உலகம் போற்றும் போர் முறைகளை பின்பற்றினான், உலகமே வியக்கும் வண்ணம் இயக்கத்தை வழி நடத்துகிறான். ஆயிரமாயிரம் சூழ்ச்சிகளை வென்றான். இவன் பிறந்த நாளன்றோ தமிழர்க்கு பொன்னாள்.
தன் இன்னுயிரை கொடுத்து இவ்வுலகில் தமிழர்களின் தலைநிமிர மண்ணில் மடிந்தாரே மாவீரர்கள், உலக சுகங்களை துறந்து சுற்றத்தை விட்டு, காடு, மலை, கடலலை என நம் கண்களை ஈர்க்கும் இயற்கையை விட்டு வாழ்க்கையே போராட்டமாய் வாழ்ந்து, அள்ளி முத்தமிடும் மழலைகளை விட்டு, சகோதர பாசத்தை விட்டு, தேனாய் இனிக்கும் குடும்ப உறவுகளை துறந்து, தன் வாழ்வை நாட்டுக்கும் மக்களுக்கும் துறப்பதை விஞ்சிய தியாகம் வேறேதும் உண்டோ? தீப்பிழம்பாய் எரிந்துபோன உறவுகளே உங்கள் நினைவுகளை எப்போதும் எம் நெஞ்சில் ஏந்துகிறேன். எந்த சுயமரியாதைக்காக எந்த கொள்கைக்காக உயிர் துறந்தீரோ அந்த தமிழீழ தாயகம் விடிய என்றென்றும் நிழல் போல் துனை நிற்போம்புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்!
Monday, December 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment