Sunday, December 30, 2007

முற்றிலுமாக தமிழரே வாழும் புதுச்சேரி, தமிழ்நாட்டின் தொடர்ச்சியாக இருக்கும்போது புதுச்சேரி ஏன் மத்திய அரசின் சிறப்புக்கட்டுபாட்டில் இருக்கவேண்டும், இந்த பகுதிக்கு ஒரு துனைநிலை ஆளுநர், ஒரு முதல்வர், சாரத்திற்கு ஒரு தனி விலை, என சிறப்பு சலுகைகள் எதற்கு? பிரஞ்சு மற்றும் போர்ச்சுகீசிய காலணியாக இருந்த பகுதிகளான புதுச்சேரி, கோவா இரண்டுமே கடலோர பகுதிகள் இந்த பகுதிகள் குடிப்பதற்கும் கூத்தடிப்பதற்குமே பயன்படுத்தப்பட்டதோடு சிறப்பு பருப்பு வகையான முந்திரி பயிரிடப்பட்டது, இந்த பகுதிகளில் இந்த கூட்டத்தினருக்கு தேவையான தேக்கு விளைவிக்கப்பட்டது, இன்றும் இந்த பகுதிகளில் வெளிநாட்டினர் விரும்பி வந்து தங்குகிறார்கள் இதனாலேயே இன்னும் இந்த பகுதிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதோடு இவை கடலோர பகுதியாக இருப்பதும் ஒரு காரணம். இந்த சிறப்பு அந்தஸ்தால் குடிமன்னர்களுக்கு வசதியாக இருந்தாலும் தமிழின மக்களை இருமாநிலமாக வைத்திருப்பது நியாயமா? வன்னியர்கள் அதிகமாக வாழும் பகுதியாக இருப்பதால் பா.ம.கவிற்கு அரசியல் ரீதியாக வசதியாக போய்விட்டது. அதனால் புதுச்சேரியை தமிழகத்தோடு இனைக்க வலியுறுத்தவில்லை. தற்போது இந்த பகுதிகள் இரால் மீன் பண்ணகளாக்கப்பட்டு வெளிநாட்டுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த இரால் மீன் பண்ணைகளால் மண்ணரிப்பு ஏற்படுவதோடு சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். இந்த பகுதியில் வாழும் வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அந்தஸ்து இல்லை. எது எப்படியோ புதுச்சேரி தமிழகத்துடன் இனைக்கப்படுவது எப்போது? நகரங்களை மாநகரமாக்கி, மாவட்டமாக்கும் கலைஞர் இந்த இனைப்பை ஏன் செய்யவில்லை. இதை அரசியல் கட்சிகள் செய்யாது, அந்த பகுதி மக்களும் செய்யமாட்டார்கள், இயக்கங்களும், தமிழக மக்களுமே செய்யவேண்டும்.

No comments: