மக்கள் கலை இலக்கிய கழகத்தாருக்கு ஒரு கேள்வி?
மக்கள் கலை இலக்கிய கழகம் எதிரின் சூழ்ச்சி திட்டங்களின் எதிர் திட்டம் என்னவாகும் இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு எல்லா தேசிய இனங்களையும் இனைத்து தேசிய அளவிலான அரசியல் ஆதிக்க அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என பன்முனை தாக்குதலை எப்படி நடத்தவேண்டும் என்பதில் ஒரு தெளிவான சிந்தனையையும் கொள்கையையும் வகுத்துள்ளனர் என்பதை கூர்மையாக ஆராய்ந்தாலும், விவரமாக நாட்டுநடப்பை அலசினாலும் புரிந்துகொள்ளலாம். சொல்லப்போனால் ஏற்கனவே ஒரு போலியான விடுதலை போராட்டம் நடத்தப்பட்டதும், போலி விடுதலை கொடுக்கப்பட்டதும், அதன்பின் பல பினாமி அரசுகள் நிறுவப்பட்டு அமெரிக்கா தான் உலகையே ஆண்டு வருகிறது என்பதை சிலாராவது நாட்டில் உணர்ந்து மார்க்சிய கொள்கையே தீர்வு என்பதையும், இந்திய அரசியல் சிக்கலை புரிந்து கொள்கையோ, திட்டமோ வகுத்திருப்பதில் குறையொன்றும் தென்படவில்லை, ஆனால் செயல்முறையில் என்ன முன்னேற்றம்? செயல்திறனில் எதிரிக்கு இனையான சக்தி வெளிப்படவில்லையே. மக்களை திரட்டி ஆயுதப்போராட்டம் நடத்துவது என்பதுதான் பெ.தி.க, மற்றும் ம.க.இ.க வின் திட்டம், ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடும் ம.க.இ.க வாலும் எதுவும் செய்யமுடியவில்லை, 2000 தில் ஆரம்பிக்கப்பட்ட பெ.தி.க வாலும் முன்னேற முடியவில்லை. சொல்லப்போனால் ம.க.இ.க வின் பாதை ஏற்கனவே நடத்தப்பட்ட விடுதலை போராட்டத்திற்கும் ஒரே வித்தியாசம் தான். அன்று மேலோங்கியது, காங்கிரஸ் மற்றும் காந்தியின் தலைமை, இன்று ம.க.இ.க வின் பாதை பகத்சிங்கின் பாதை ஆனால் தேசியம் என்பது இன்றும் நாளையும் இந்திய தேசியம் தான். தமிழ் தேசியவாதிகளை எதிர்க்கும் வரை ம.க.இ.க தமிழகத்தில் வளர்ச்சி கானமுடியுமா என்பது புரியவில்லை. ஒருவேளை இவர்கள் கேட்பது போல விடுதலை கிடைத்தாலும் தமிழ்தேசிய சிந்தனைக்கு இவர்கள் வரமாட்டார்கள், அப்போதும் அண்டை மாநிலங்களை பகைத்தால் பாதுகாப்பு, நீர் ஆதாரங்கள் பகிர்வு என்ற அளவில் பிரச்சனை வரும் என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும், மேலும் ஒற்றுமை குலைந்தால் மீண்டும் அமெரிக்க ஏகாதிபத்திற்கு இரையாகிவிடுவோம் என்பார்கள். சரி தமிழ் மொழியோடு ஆங்கிலம் கற்பதில் என்ன குற்றம், ஹிந்தியை கற்பதில் என்ன குற்றம்? என்று போனால் மொழியில் என்ன இருக்கிறது என்ற கேள்வியோடு இனவாதம், அல்லது தமிழ்தேசியம் என்பது இல்லாமலே போய்விடும். சரி சுதந்திர இந்தியா அதாவது ஏகதிபத்திய ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுபட்டு சோசியலிச சமதர்ம
சமுதாயம் வந்துவிடுகிறது பின் எத்தகைய தேசிய இனங்கள் உருவாகும்? தென்நாடு, வடநாடு என்ற அல்லது திராவிட தேசியமா? அல்லது மொழிவாரி தேசியமா? புரியவில்லை. பின் பிறமாநிலத்தவர் இங்கிருந்து கொண்டு கொடைச்சல் கொடுத்தால் என்ன செய்வது? இந்திய மக்கள் அனைவருமே சோசியலிச சமதர்ம சமுதாயத்தை ஏற்றுக்கொள்வார்கள். இதற்கு ம.க.இ.க என்ன சொல்லுமோ தெரியவில்லை?
இன்றைய மூவர்ன தேசியகொடிக்கு சல்யூட் அடிப்பீர்களா ம.க.இ.க மக்களே?
Saturday, December 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment