Sunday, December 30, 2007

காதலும் கல்யாணமும்

இயற்கையாய் தோன்றும் உணர்வுகளால் தோன்றுவதுதான் காதல். ஆனால் இன்று காதல் வரும் காரணத்தை கொண்டு காதல் ஆராய்ச்சியாளர்கள் காதலையே நாற்பது வகையாக பிரித்துவிட்டனர். அது ஒருபுறம் இருக்க இன்று வரும் காதலின் நேர்மையே கேள்விக்குறி அதோடு பெற்றோர் பார்த்து யாருக்கு யாருடன் காதல் வரவேண்டும் என்பதை முடிவு செய்வது போல் ஒரு மடமை ஏற்றுக்கொள்பவர்களை தான் நாம் குற்றம் சொல்லவேண்டும். சரி காதலையே எதிர்த்து தங்கள் விருப்பத்திற்கு கூட்டிக்கொடுக்கும் சமூகத்தில் சுதந்திரமாக காதல் வருமா? குடும்பம் என்னும் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட பெண்ணுக்கு இருக்கும் தடையோ திருமணம் செய்துகொண்ட நீ இவனை தவிர எவனையும் காதலிக்கூடாது என்பது தான். எந்த பெண்ணையும் இவனோடு கடைசிவரை வாழவேண்டும் என்று கட்டளையிட எந்த சட்டத்திற்கும் உரிமையில்லை. நான் தாலி கட்டியவன் இவள் எனது சொத்து என்று சொல்வது பெண்ணையும் ஒரு உயிர்ற்ற பொருளாக்கும் முயற்சியாகிறது. சுதந்திரமான நேர்மையான உள்ளுணர்வின் உந்துதலால் ஏற்படாத காதல், காதலின் இலக்கணமாகாது, அது காதலுமாகாது. சொந்தங்கள் யாவும் சேர்ந்து ஒரு பெண்ணை விலைபேசி குத்தகைக்கு எடுக்கும் விபச்சாரமே கல்யாணம். கால், கை, மூக்கு, வாய், பல்லை பார்த்து நடந்து காட்டச்சொல்லி இந்த பெண் நன்றாக இருக்கிறாள் என்று ஜாதகம் பார்த்து இந்த மாட்டினால் செல்வம் கொழிக்குமா, யோனி பொருத்தம் ஆடா, கோழியா, குரங்கா, எருதா என்றெல்லாம் பார்த்து கடைசியாக மந்தியோனி ஆணுடன் எருது யோனி பெண்ணை சேர்த்து வைப்பார்கள். இவர்கள் எந்த நேரத்தில் சேரவேண்டும் என்று போக்கத்த பார்ப்பான் நேரம் பார்த்து சொல்லுவான். யாருக்கு பிறந்தோம் என்று கூட தெரியாத அமெரிக்கர்கள் விஞ்ஞானிகள் ஆகவில்லையா? இந்த வைதீக திருமண முறைகளில் மணக்கொலையும் பெறும் கொள்ளையும் தான் நடக்கிறது. விருப்பபட்டவர்கள் இனைந்து வாழும் வாழ்க்கைக்கு இந்த கருமங்கள் எதற்கு? இப்போது நாட்டில் வரும் காதல்கூட ஒரு முதலாளிக்கும் வேலைக்காரிக்கும் தான் வருகிறதே தவிர, ஒரு சாப்ட்வேர் புராஜெக்ட் மேனேஜர் பெண்ணுக்கும் கேப் டிரைவருக்கும் வருவதில்லை. வர்க்கம் பார்க்காமல் ஜப்பான் அரச குடும்பத்து இளவரசிக்கும் ஒரு கிளார்க்கிற்கும் காதல் வந்ததுபோல் காதல் வந்தால் சமத்துவமும் ஓங்குமல்லவா? ஆனால் காதல் இப்படித்தான் வரவேண்டும் என்று நாம் நிர்பந்திக்கமுடியாது ஆனால் காதல் வருவதில் யோக்கியதை இருக்கவேண்டுமல்லவா? காசை பார்த்து காதல் வருவதெல்லாம் காதலாகுமா? நடைமுறை பழகத்தில் குணத்தால் பொருந்தி நீ இல்லையேல் நான் இல்லை என்ற நிலை வருவதுதான் காதல். அந்த காதல் நமக்கு வருகிறதோ இல்லையோ காண்பதே கூட அரிதாகத்தான் இருக்கிறது. உழைக்கும் மக்கள்டையே இந்த நேர்மையான காதல் ஓரள்வு உண்மையாக இருக்கிறது என்று தோன்றுகிறது, ஏனெனில் நேர்மையும், உண்மையும் அங்கே தான் கானமுடிகிறது

No comments: