Monday, December 10, 2007

அப்பா டவுசர், மகனுக்கு பேண்ட், அம்மாவுக்கு லோ கட்...

மண்ணின் மைந்தன்: தொடர்வண்டி நிலையத்தில் கண்ட காட்சி இது. 35 வயது மனிதர் அரைக்கால் டவுசருடன் வந்தார். அவர் கையை பிடித்துக்கொண்டு வந்த மகனுக்கோ வயது 3க்குள். ஆனால் அவர் அணிந்திருப்பதோ முழுக்கால் பேண்ட். அந்த குடும்பத்தலைவியோ லோ கட் ஸ்லீவ்லெஸ் ஸ்கர்ட் & லோ வெய்ஸ்ட் ஜீன்ஸ் பேண்ட்(டைட் பிட் முக்கியமாக சொல்லவேண்டியது). அதென்னமோ இந்த மாதிரியான காட்சிகள் தான் என் கண்ல படுது, கண்ண கொஞ்சம் சரி பார்க்கனும். இதென்ன ரிவர்ஸ் டெவலப்மெண்ட் இன் டிரெஸ்ஸிங் கல்சர்?

தமிழச்சி: மண்ணு மைந்தா...., ஊருல டவுசர் போட்டவன் கோமாளியா? இப்போ குருதிப்புனல் படத்துல கவுதமி கமலஹாசன குளிப்பாட்டுவாங்க அப்புறம் அவரு ஜட்டியை மாட்டுற மாதிரி ஒரு சீன். நாங்க என்ன கணவனை குளிப்பாட்டுவது எப்படி? ஜட்டி மாட்டுவது எப்படி? அப்படின்னு எல்லாமா கேட்டோம். ஆனா இது மாதிரி பல சீன்கள் தமிழ் சினிமாவுல, உட்காந்து வாயை பொளந்துகிட்டு பாக்குறீங்க இல்ல? கேட்டா படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் வைப்பாங்களாம். அவ்வளவு ஏன் தமிழக முதல்வர் கருணாநிதி திரைப்பட விருது வழங்கும் விழாவுல மேடையில போடப்பட்ட சீனாதானா ஆட்டத்த கீழ அமர்ந்து பார்த்துட்டு ரெண்டு மணி நேரம் மெய்மறந்து வேற உலகத்துக்கு போயிட்டதா சொல்லியிருக்காரு. அதென்ன வருசம் தவறாம சீனாத்தானப்பாட்டு....? அவரு விரும்பி கேட்ட பாடலா இருக்கலாம்..அதோட இந்த கூத்தாடி பயலுங்க குடிச்சது, கூத்தடிச்சதுனால வந்த கோடிக்கணக்கான ரூபாய் கடனை அப்பப்போ அடைக்கிறாரு அந்தாளோட அப்பன் வூட்டு சொத்து மாதிரி எடுத்து, அத கேட்கமாட்டீங்க. எப்படி எப்படி சமஞ்சது எப்படின்னு ஒருத்தன் பாட்டு எழுதுனான். கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமான்னு ஒரு கொழந்த பையன் பாட ஒரு கொழந்த பொண்ணு தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா இல்ல புள்ளகுட்டி பெத்துகிட்டு கட்டிகலாமான்னு விவரம் புரியாம பாடிகிட்டு இருக்குதுங்க. இதையெல்லாம் கேட்காம டவுசர் போட்டாங்க பேண்ட்ட போட்டாங்கன்னு... அதையாவது போட்டுகிட்டு வரானுங்களேன்னு சந்தோசப்படாம.

No comments: