Tuesday, January 1, 2008

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்

நேற்றுபோல் இன்று இல்லை, இன்று போல நாளை இல்லை, எல்லா பொழுதும் நல்ல பொழுதே, எல்லா நாளும் நல்ல நாளே, நாம் நல்ல புத்தியுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்தால். ஒரு கணக்கிற்காக வருடமாக கணக்கிடப்பட்டுள்ளதை பயன்படுத்தி புத்தாண்டு என்பதை ஏதோ ஆகா ஓகோவென தூக்கி வைத்து வருடத்தின் முதல் நாளே விடுமுறையாக்கி, வெட்டியாக பொழுதை கழிக்கின்றனர். திசம்பர் 31 க்கும் ஜனவரி 1க்கும் என்ன வித்தியாசம், அதே பகல், அதே இரவு, வாழ்வில் முன்னேற துடிப்பவர்கள் கால நேரத்தின் வருகைக்காக காத்திருப்பதில்லை. இலக்கை நோக்கி பயனித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். இதற்காக ஒருநாள் விடுமுறையாக்கி, அன்றெல்லாம் ஆண், பெண், இளையவர், முதியவர் என அனைவரும் குடித்து மூத்திரம் விட வேண்டுமா? அதோடு மட்டுமா தூக்கமுடியாத உடம்பை வலைத்து நெளித்து 5 நட்சத்திர ஓட்டலில் அரைகுறை ஆடையுடன் கும்மாளமிடவேண்டுமா? பின்னர், அவன் அங்க குத்தினான், இங்க குத்தினான் என்று வரவேண்டியதுதான். ஒரு தேவையற்ற ஆரவாரம், இதனால் அவசியமில்லாமல் காவல்துறைக்கு தலைவலி. கொண்டாட்டாம் என்பது மனதை அமைதியாக வைத்துக்கொண்டு மக்களோடு மக்களாக அன்பை பகிர்ந்துகொள்வது தானே ஒழிய, 5 நட்சத்திர ஓட்டலில் குடித்து குளத்தின் மீது ஆடி மூச்சை துறப்பதல்ல. இந்த ஆட்டமெல்லாம் நகரத்தில் உடல் உழைப்பின்றி கொழுப்பேறிய குடிமக்களிடம் தான் இந்த ஆட்டமெல்லாம். உழைத்து களைத்த தமிழ் மக்களுக்கு வருடத்தின் இறுதி நாளோ முதல் நாளோ எல்லாம் ஒரு மாதிரியான நாட்கள் தான். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையும், தமிழ் வருட பிறப்பையும் தமிழர் ஒரு பண்பாட்டு விழாவாக மிக அடக்கமாகவும், நன்றியுணர்வுடனும் கொண்டாடுவதே சிறப்பான விழாவாகும். குடித்துவிட்டு எக்காளாமிடும் ஆங்கில புத்தாண்டு என்பது வணிக ரீதியான ஒரு ஆண்டாக எடுத்துக்கொள்ளலாமே ஒழிய அதில் கொண்டாட தமிழர்க்கு ஏதுமில்லை.

No comments: