Wednesday, January 2, 2008

பெனசீர் மரணத்திற்கு பிறகு நடந்த கலவரம்

ஒரு அரசியல் தலைவர் கொல்லப்பட்டால் அந்த கட்சி அபிமானிகளுக்கு மட்டுமல்ல மனிதநேயமுள்ள எவருக்குமே வருத்தமிருக்கும். ஆனால் எந்த குற்றமும் செய்யாத அப்பாவி மக்கள் உழைப்பாளிகளின் உடைமைகளை சூறையாடுவது என்ன நியாயம்? பெனசீர் இறந்த பிறகு நடத்தப்பட்ட கலவரத்திற்கு சுமார் 20000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொது மற்றும் தனி சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளது, வங்கிகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அலுவலகங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. எந்த கலவரத்தாலும் இறந்தவரை மீண்டும் உயிர்பிக்கமுடியாது என்பது கூடவா புரியவில்லை? இப்படி ஒரு அரசியல்வாதிக்காக மேலைநாடுகளில் கலவரங்கள் நடத்தப்படுவதில்லை. பெனசீர் கொல்லப்பட்டதற்கு முஷாரப் பொறுப்பேற்க வேண்டுமானால் இதற்கும் அவரேதான் பொறுப்பு அதே சமயம் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு இதில் பொறுப்பில்லையா? இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார், இப்படி அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நட்டைஈடு கொடுக்கப்போகிறார்கள்?

No comments: