அறிவியல் தமிழ்
தமிழ் அமுதென்றும், இனிய தேன் என்றும், தமிழை சுவைப்பருக்கு தெரியும், ஒரு மொழியாக மட்டுமே பார்ப்பவர்க்கு புரிய வாய்ப்பு இல்லை. ஆனால் காதலின் மொழியாகவும், இனிமையாகவும் உள்ள நம் உயிரினும் மேலான தமிழ்தாயை அறிவியல் தமிழாக உயர்த்தவேண்டும் என்று பாரதி, பாரதிதாசன் மற்றும் இன்றைய முற்போக்கு சிந்தனையாளர்கள் பலரும் அறிவியல் தமிழாக மாற்றுவதே தமிழர்களை முதலாளி வர்க்கத்திடமிருந்து காக்க ஏதுவாக இருக்கும் என்று கருதுகிறார்கள். ஆங்கிலம் அறிவியல் மொழியாக இருப்பதால் தான் பெரியாரே ஆங்கிலம் கற்கச் சொன்னார், அதே சமயம் மலேயா, சிங்கப்பூர் போயாவது பறை பட்டத்தையும் பள்ளப்பட்டத்தையும் துறந்துவிடுங்கள் சுயமரியாதையுடன் வாழுங்கள், வேறு தேசத்திற்கு போவதால் வரும் பல்வேறு இழப்புகளை பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால் இன்று தமிழ் வழி கல்வியே இல்லை என்னும் நிலையாகிவிட்டது, தமிழரே இல்லை என்ற நிலை வரும் காலம் தூரத்தில் இல்லை. மனிதன் அமைதியாக ஓரிடத்தில் வாழ அரசியல் சூழல் நிம்மதியாக அமையவேண்டும், அதற்கு மக்கள் இங்கு தங்கி போராடி அரசியலை மாற்ற வேண்டும். அதோடு அறிவியல் அல்லாமல் நாக்ரீகமும், நவீனத்துவமும் இல்லை. ஆறிவுள்ள மனிதனும் இது அவசியமாகிறது. எனவே. தமிழை அறிவியல் தமிழாக உயர்த்தி மருத்துவ, பொறியியல் மற்றும் கணினி கல்வியையும், ஆராய்ச்சிகளை தமிழிலேயே மேற்கொள்ளப்படாவிட்டால், தமிழை காக்கமுடியாது. காலத்திற்கு ஏற்றவாரு மொழியியல் சிந்தனையிலும் மாற்றம் இருந்தால் தானே அந்த சமூகம் வளரமுடியும்? இப்போது கணினி பயபாடு தமிழில் வந்திருப்பதால், ஆங்கில புத்தகங்களை தமிழில் கொண்டுவருவது சுலபம் அதோடு செம்மொழியான தமிழ், அறிவியல் மொழியாகவும் மாறிவிட்டால் தமிழர்கள் ஏன் அடிமையாக வாழவேண்டும். மொழியியல் தேசியத்தில் அனைவரும் தமிழகத்திலேயே வாழவேண்டும் என்பது பாசிச உணர்வோ, முதலாளித்துவ உணர்வோ அல்ல. மாறாக நம் வீட்டுத் தோட்டத்தில் அடுத்தவன் பூ பறிக்காமல் இருக்க நாம் நம்மை வளர்த்துக்கொள்ளும் உத்தியே.
Tuesday, January 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment