Tuesday, January 29, 2008

நடிகர் இராஜசேகரை தாக்கிய சிரஞ்சீவி ரசிகர்கள்

நடிகர்களின் சம்பளமில்லா கைகூலிகள் ரசிகர்கள் என்று சொன்னால் மிகையாகாது. நடிகர்கள் சம்பாதித்த காசை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் கூட அவனிடம் விட்ட காசை பிடுங்க இந்த ரசிகர்கள் நடிகர்களை அரசியலுக்கு இழுப்பதும், தாங்கள் ஒரு லோக்கல் தாதா ஆகிவிடலாம் என நினைப்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. நடிகர் சிரஞ்சீவிக்கு அரசியல் அனுபவம் இல்லை, அதனால் அவர் கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியில் சேரப்போவதில்லை என்று தன் கருத்தை கூறிய நடிகர் ராஜசேகரையும் அவர் குடும்பத்தையும் ஹைதிராபாத்தின் முக்கிய பகுதியான பஞ்சகுட்டாவில் வைத்து வளைத்து தாக்கியிருக்கின்றனர் நடிகர் சிரஞ்சீவியின் ரசிகர்கள். இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு பெண்ணும் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் மிக கீழ்த்தரமாக நடந்துகொண்ட ரசிகர்களின் வெறி நாய்த்தனத்தை என்னவென்று சொல்ல? கேவலம் ஒரு மனிதன் தன் கருத்தை சொல்ல சுதந்திரம் இல்லை இந்த நாட்டில், இந்த ரசிகர்கள் வாக்களித்து ஒரு அரசாங்கம் வந்தால் எப்படி நாறுமோ பூமி? ஆனால் சிரஞ்சீவி நாகரீகத்தின் அடையாளமாக ராஜசேகரை சந்தித்து ஆறுதல் கூறி மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: