Tuesday, January 1, 2008

காதலர் தினம்

நண்பர்கள் தினம், அண்ணையர் தினம் என எத்தனையோ தினங்களில் ஒன்று காதலர் தினம். காதலர் தினம் பிரபலமான அளவிற்கு அண்ணையர் தினம் பிரபலமில்லை ஏன் என்று தெரியவில்லை, காதலர் தினத்தில் இருக்கும் போதையும், தேவையும் அண்ணையர் தினத்தில் இல்லை போல. பலர் நான் என்னை அண்ணையையும் காதலர் தினத்திலேயே காதலால் கொண்டாடுகிறோம் என்கிறார்கள். என்னவோ நமக்கு எல்லா நாளும் அன்னையை நேசிக்க, காதலை கொண்டாட தனியாக ஒரு நாள் எதற்கு, பிறந்த நாளும் அப்படித்தான், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள் தான், பிறகென்ன பிறந்த நாள்? எனினும் சாதியாதிக்கம் நடக்கும் இந்த நாட்டில் காதலர் தினத்தை ஒரு சாதி ஒழிப்பு நாளாக எடுத்துக்கொள்ளலாம், காதலர் தினத்தில் வாழ்த்து அட்டை கொடுப்பதைவிட காதலையே கொடுக்கலாம், அல்லது அன்பு பரிசா ஏதாவது கொடுக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம், இருந்தாலும் காதலர் தினத்தை நம் பணக்கார கூட்டம் குடியிலும் கும்மாளம் என்ற பெயரில் பொது இடத்தில் நாய்களை போல நடந்துகொள்வது நாகரீகமாக தெரியவில்லை. காதலை கொண்டாடுவோம் தினமும், காதலர் தினத்தைவிட காதலை கொண்டாடுவதே சரியாகவும், சிறப்பாகவும் இருக்கும்.

No comments: