தமிழ் இனத்தின் மீது திரும்பியிருக்கும் அமெரிக்காவின் பார்வை
மலேசிய வாழ் தமிழர்கள்களின் உரிமை பிரச்சனையை மனிதநேயத்துடன் அனுகவேண்டும், அமைதியான வழியில் உரிமைக்காக போராட அனுமதிக்கவேண்டும் என தமிழ் இன மக்கள் பிரச்சனைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அமெரிக்கா தற்போது இலங்கைக்கு ஆயுத உதவியை நிறுத்தி உத்தரவிட்டிருக்கிறது. விடுதலைபுலிகள் அமைப்பை தீவிரவாத இயக்க பட்டியலில் சேர்த்து தடை விதித்தது முதல் புலிகளுக்கு எதிரான போக்கை கடைபிடித்தாலும் ஈழத்தமிழர் பிரச்சனையில் அனுதாபத்துடனும் புலிகள் மீது அரசியல் ரீதியான தடை விதித்தாலும் கடும் நசுக்குதலை செய்யவில்லை. தற்போது புலிகள் அமைப்பு சில பின்னடைவுகளை சந்தித்த பின் புலிகளுக்கு ஆதரவான போக்கை கடைபிடிக்கிறது அமெரிக்கா, இது தமிழர்கள் மீது உலகத்தின் பார்வை திரும்ப ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
Wednesday, January 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment