Sunday, July 1, 2007

ஒரு தமிழரிடம் கேட்கப்பட்ட கேள்வி!


"இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத பரபரப்பு ரசினிக்கும், "சிவாஜி'" படத்துகும் கொடுக்கப்படுகிறது, பார்த்தீர்களா?

அவரது பதில்,

"சினிமாக்காரர்கள் தமிழகத்தை எவ்வள்வு கேவலமாக, கீழ்தரமாக, தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம்! மாநில முதல்வர், முன்னாள் முதல்வர்கள் முன்கூட்டிப் பார்த்து படத்துக்கு விளம்பரச் சான்றிதழ் வழங்குகிற் கொடுமை உலகத்தில் வேறு எங்கும் நடந்திருக்காது. பாண்டிச்சேரி முதல்வரோ, ஒரு படி மேலே போய் ஒரு நடிகையோடு சேர்ந்து அந்தத்திரைப்படத்தின் முதல் சினிமா டிக்கெட் விற்பனையைத் துவக்கிவைக்கிறார்! அதேபோல், இன்னொரு நடிகருக்குப் பிற்ந்த நாள் விழாவாம்…. அதற்காக, பாண்டிச்சேரியில் இருந்து ஒரு ரசிகன் சென்னை வரை பின்னோக்கி நடக்கிறானாம்! அந்தப் பயணத்தை புதுவை முதல்வர் துவக்கிவைக்கிறார். சீரழிவின் உச்சகட்டம்ல்லவா இது!

பல மாதங்களாக உழைத்துச் சேர்த்த பணத்தைக் கொண்டு போய் பாலும் பீரும் வாங்கி நடிகரின் கட் அவுட்டுகளுக்கு ஊற்றுகிறார்கள். 20 ரூபாய் டிக்கெட்டுக்கள் 1,000 ரூபாய் வரை விற்கப்ப்ட்டதாகச் சொல்கிறார்கள். நடிகர்களுக்குப் பின்னால் அலையும் ஒவ்வொரு ரசிகனும், 'நான் ஒரு முட்டாளுங்க! ஏன்னா, நான் ரசிகர் மன்றத்தில் இருக்கேனுங்க' என்று தன் நெற்றியில் ஒட்டிக்கொள்ளாத குறையாக அலைகிறான்.

எந்தவிதக் கொள்கையும் கோட்பாடுகளும் இல்லாத ஒருவர் அரிதாரம் பூசிக்கொண்டு சினிமாவில் நடித்துவிட்டு, வயதான பிறகு நடிக்க முடியாமல் அரசியலைத் தொழிலாகச் செய்யலாம் என்று வருகிற கொடுமையும் தொடர்ந்து நடக்கிறது. இந்த நடிகர்களுக்கு என்ன பின்னனி இருக்கிறது? என்ன வரலாறு இருக்கிறது? மக்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள்? திரைப்படங்களில் இவர்கள் பேசுகிற வசனங்களுக்கும் கதைகளுக்கும் இந்த சமுதாயத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?"

1 comment:

winner said...

உங்களது கட்டுரைகளில் உண்மைகள் இருக்கின்றன.

உங்களது எண்ணங்கள் உங்களை முன்னோக்கிச் செல்லும் என்பது புரிகிறது.

நன்றி.