காவிரிப்போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!
சமூக அநீதிகளை சகித்துக்கொண்டும் கோழைகளாய், அடிமைகளாய், தன்னலவாதிகளாய் இழிந்த வாழ்க்கை வாழும் அற்ப மணிதர்களைக் கண்டு சினந்து வெடிக்கும் பாரதிதாசனின் கவிதை வரிகள்:
பள்ளம் பறிப்பாய்
பாதாளத்தின் அடிப்புறம் நோக்கி அழுந்துக அழுந்துக!
பள்ளந்தனில் விழும் பிள்ளைப் பூச்சியே
தலையை தாழ்த்து முகத்தை தாழ்த்து
தோளையும் உதட்டையும் தொங்கவை!
ஈன உளத்தை உடலை உயிரைச் சுருக்கு
நக்கி குடி அதை நல்லதென்று சொல்!
தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும் தாழ்ந்து போ
குணிந்து தரையை கவ்விய ஆமையைப் போல் அடங்கி ஒடுங்கு!
ஒட்டுப் பூச்சியே உண்மை தேரையே!
அழு, இழி, அஞ்சு குனி பிதற்று
கண்ணங்கருத்த இருட்டின் கறையே!
தொங்கும் நரம்பின் தூளே! இதை கேள்!
மணிதரில் நீயும் ஓர் மணிதன் மன்னன்று.
இமை திற எழுந்து நன்றாய் என்னுவாய்
தோளை உயர்த்து சுடர் முகம் தூக்கு
மீசையை முறுக்கி மேலே ஏற்று
விழித்த விழியில் மேவிண்ணுக்கொளி செய்
நகைப்பை முழக்கு நடத்து லோகத்தை
உன் வீடு உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகளுக்கிடையில் திரையை விலக்கி
நாட்டோடு நாட்டை இணைத்து மேலே ஏறு
வானை இடிக்கும் மலை மேல் ஏறி நின்று பாரடா எங்கும் பாரடா!
Saturday, July 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment