தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!
பெங்களூரின் உண்மை பெயர் வென்கல்லூர் என்ற தமிழ்ப்பெயர் என்பது தெரியுமா?
கோழைகளின் முதல் வேலை நம் கொள்கை உறுதியை அசைத்துப்பார்ப்பது, சீண்டி துன்புறுத்துவது. அடிப்படை வாழ்வுக்கு ஊறு விளைவிப்பது. எந்த கட்டுக்குள்ளும் அடங்கி போகாது, உயிரைவிட துணிந்தவன் மிரட்டலை கண்டு நகைப்பான்.
நான் அமெரிக்க மூத்திரம் பெப்சி கோக் குடிப்பதில்லை. டீ, காபி உடல் நலக்கேடு.
தொப்புளாட்ட சினிமா பார்ப்பதில்லை!
கொடுமையை சகித்துக்கொள்பவன் கோழையே!
குடிநீருக்கு காசா? என்னடா அரசாங்கம், அரசு மக்களுக்காகவா? இல்லை முதலாளிகளுக்காகவா?
தனியுடமை கொடுமைகள் தீர புரட்சி செய்யடா!
தமிழர்கள் அனைவரும் தமிழகத்தில் வாழ்ந்தால் நன்மைகள் பல கோடி!
தமிழக கணினி அறிஞர்களின் உழைப்பு பண்ணாட்டு பண முதலைகளால் சுரண்டப்படுகிறது. கணினி மென்பொருள் ஏற்றும்தியை அரசே செய்தால் தமிழர்க்கும், தமிழ்நாட்டுக்கும் நன்மை!
இயற்கை வளத்தை சுரண்டினான் வெள்ளையன். அதற்கு அவனே வந்தான். இன்று மனித வளத்தை சுரண்ட உள்ளூரிலேயே கைக்கூலிகள் வைத்துள்ளான். இதற்கு அரசு மரியாதை!
22 முதல் 35 வயது வரை உள்ள அனைத்து கணினி அறிஞர்களும், தமிழ், தமிழர், தமிழ்நாட்டுக்கே உழைத்தால், உலகமே நமக்கு பின்னால்! அனைத்து வசதியையும் படைத்து, அந்நியனுக்கு கடை விறிப்பது புத்திசாலித்தனமா? தமிழா எல்லாம் இருந்தும் ஏன் இன்னும் அடிமை வாழ்க்கை?
தமிழர் வசதியை மற்றவனுக்கு விற்று வாழ்வதை விட தமிழர் முன்னேற்றத்திற்கே பயன்படுத்துத்ல் மேன்மை தரும்!மக்கள் ஒன்றுபட்டால் அரசியல்வாதிக்கு மரியாதை இல்லை, எனவே மக்களை வாடகைக்கு விட்டு சொத்து சேர்த்தல் அரசியல் தலைவர்கள் குணம்? இவர்கள் தலைவர்களா? கோடாரிகாம்புகளா? சிந்திப்பாய் தமிழா!
தமிழ்நாட்டில் படித்த நாம் ஏன் எங்கோ யாருக்கோ உழைக்க வேண்டும். உள்ளூர் வெளியூர் அரசியல் கயமை கொன்று தமிழர்கள் ஒன்றே ஆகுவோம்!
இளைய தலைமுறையே! மக்கள் களம் புகு, தொண்டு செய்! அரசியல் களம் புகு புரட்சி செய்! பொதுநல உணர்வு கொள்!
சாராயக்கடையை அரசு நடத்துகிறது! கல்விக்கூடங்களை தனியார் நடத்துகிறது! அடுத்து அரசு என்ன விபச்சாரம் நடத்தப்போகிறதா?
ஊர் போடும் குப்பையை கூட்டி பெருக்கும் தோழனுக்கு விழா எடுத்து மரியாதை செய்! அரசியல்வாதியை செருப்பால் அடி!
குருத்தோலை வெட்டி தென்னையை கொலை செய்தால் பாவமாகாதா?
என் கண்களை தானம் செய்கிறேன்! தமிழீழ விடுதலையை காணவேண்டும் என்றான் எம் தோழன்! அவன் கண்கள் பிடுங்கி காலால் மிதித்து உடைக்கப்பட்டது, உயிரை எடுக்கும் முன் அவன் உயிர் விதை வேரோடு பிடுங்கப்பட்டது, தமிழினத்தாய்மார்கள் சொல்லமுடியாத வேதனையை அனுபவிக்கிறார்கள். எம் தமிழ் மக்கள் உயிர் வதை கண்டவர்கள், உயிரின் மதிப்பை தெரிந்தவர்கள், விலை கொடுக்கமுடியாத உயிரை மண்்ணுக்காகவும், மக்களுக்காவும் கொடுத்திருப்பது உலகிலேயே எம் தமிழினம் மட்டுமே அடிப்பட்ட அனுபவத்தால் மனிதநேயம் அறிந்த எம் தமிழனே எமது மீனவர்களை கொலை செய்தான் என்று சொல்வது நம்மை நாமே கீழ்மை செய்வது. தமிழா சூழ்ச்சிக்கு பழியாகாதே!
ஆளுநர் என்பவரின் பணி என்ன? அவரால் பயன் என்ன? மத்திய அரசின் அதிகாரபூர்வ ஒற்றரா? அவருக்கு மக்களின் வரி பணம் வாரி இரைக்கப்படுகிறதே!
தேசம் என்பதின் தத்துவம் என்ன? சுதந்திரத்திற்கு முன் இந்தியா என்று ஒரு நாடு உண்டா? Unity in Diversity is Cheating. ஒரு மொழிவாரி இனமே ஒரு தேசமாக வாழ முடியும். முஸ்லிம் நாடான பாகிசுதான் வங்கதேசம் ஏன் பிரிந்தது? வங்கதேசத்தில் வசிப்பவன் வங்காளம் பேசுவதால்தானே? இந்திராகாந்தி பாகிசுதான் மீது போர் தொடுக்காவிட்டால் மேற்குவங்கம் போர் செய்யும் என்ற முழக்கம் ஏன் எழுந்தது? வங்கத்துக்கு ஒரு நீதி தமிழீழத்திற்கு ஒரு நீதியா? இதுதான் நேரு குடும்பத்தின் ஓரவஞ்சனை!
இந்தியா சுரண்டலுக்காக அமைக்கப்பட்டதா? தமிழ்நாடு என்ன அமெரிக்காவின் காலணியா கோக் பெப்சி விற்க? 50 பைசா தயாரிப்பான பெப்சி, கோக் 10 ரூபாய்க்கு விற்கப்படுவது பொருளாதார சுரண்டல் ஆகாதா?
சூரியன் எஃப் எம்மில் காலை சுமார் 9.00 மனியளவில் ஒலிபரப்பபடும் பிளேடு நம்பர் 1, குண்டக்க மண்டக்க போன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள், சிறுமிகள், மாணவிகள் பேசினால்கூட "ஐ லேடீஸ், லேடீஸ்" என் பெண்களை கேவலப்படுத்துகிறார்களே பெண்களே! உங்களுக்கு தன்மான உணர்வில்லையா? இந்த நாய்கள் பெண்களை பார்த்தது இல்லையா?
வாஜ்பேயி, மன்மோகன் என்ற இந்தி-யர்கள்க்கு தமிழன் ஏன் ஓட்டு போட வேண்டும். தமிழா நீ தமிழனா? இந்தி-யனா?
இது தவறு அது தவறு என்று அப்பாவிகளை கைது செய்யும் அரசே! நீ அடிப்படை சட்டக்கல்வி கொடுத்தாயா? அடிப்படை கல்வியாவது எல்லோர்க்கும் கொடுத்தாயா? (Statuatory Warning-Smoking is Injurious to Health!) இதை போடாவிட்டால் சிகெரெட் விற்கமுடியாது, ஆனால் அரசே! நீ இது தவறு என்று சொல்லாம்ல் கைது செய்கிறாயே உன்னை யார் தடை செய்வது? நீதிமான்கள்-தன்மான கவரிமான்கள் கவனிக்க please. வேண்டுமானால் இதை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தருகிறேன்!
தன்மானமுள்ள நீதிபதிகள் யாரும் சொத்துக்கணக்கை சமர்பிக்க சம்மதிக்கமாட்டார்கள்!-- உச்ச நீதிமன்்ற முதல் தலித் தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க போகும் நீதிமான். ஏன் தன்மானமுள்ள நீதிபதிகளிடம் வரம்புக்கு மீறிய சொத்து உள்ளதா? ஓ! இவர்கள் சொத்துக்கணக்கில்தான் தன்மானத்தை வைத்துள்ளார்கள் போல!
மொழி தெரியாத, இந்த மக்களோடு பழகாத, உணர்வுகளை, சராசரி வாழ்க்கையை புரிந்துகொள்ளாத ஒரு நீதிபதி சரியான தீர்ப்பை சீர்தூக்கி சொல்லிவிடமுடியுமா? புத்தகத்தில் எழுதியிருப்பதை படித்து தீர்ப்பு சொல்ல ஒரு கணிப்பான் போதாதா? இனி நீதிபதிகளுக்கு பதிலாக கணிப்பான்கள் வந்தாலும் வரலாம்!!!!
வானம் பார்த்த பூமி விளையாத போது, வீரப்பன் காட்டுக்கு வேட்டைக்கு போகாமல் பணமுதலைகளை வேட்டையாடி இருக்க வேண்டும்! அவரை கொலை செய்து பணவேட்டையாடிய நரிகள் யார் என்பது தமிழினம் அரியும். காட்டுகறுப்பு வெள்ளை குதுருக்குள்!, கசானா வெள்ளை, பிரித்து பரிசாக்கப்பட்டது!
உழுபவனுக்கே நிலவுடமை என விதி செய்வோம்!
தினமும் 4 மணி நேரம் பொதுநல சேவை செய்வோம்! தமிழகத்தில் உலகம் மதிக்கும் விந்தைகள் செய்வோம்!
பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கி போகும் கணினி அறிஞர்களே! அந்நியர்கள் ஆகபோகிறீர்களா? தமிழ் மறந்து தனியாரின் கைக்கூலியாகலாமா? உங்கள் பொதுநல சிந்தனை அபகரிக்கப்பட்டு ரோபோக்கள் ஆக்கப்பட்டுவிட்டீர்கள்! உங்கள் பிள்ளை உங்களை ஊதாசினப்படுத்தும் போது தெரியும் பொதுநலத்தின் மேண்மை! சமத்துவத்தின் தேவை! செந்நிறத்தின் வலிமை. செங்கொடி ஏந்தியவனிடம் வேற்றுமையில்லை!
Minto fresh மிட்டாய் தின்னா Minto fresh owner பொண்டாட்டி நம்மோடு வருவாளா? ஆயிரம் பேர் தின்னா யாரோடு போவா? Minto fresh மிட்டாய்காரனைய் செருப்பால் அடி!
எருமைக்கு Fair & Lovely போட்டால் அழகாகிவிடுமா? அப்படியானால் Fair & Lovely owner மகனுக்கு எருமையோடு கல்யாணம் செய்துவைப்பானா?
வண்ண தொலைக்காட்சிப் பெட்டி இலவசமாய் கொடுத்த தமிழக அரசே! தண்ணீரை நீ எங்கே வாங்கினாய் மாதம் 75 ரூபாய் வரி போடுகிறாயே! நாட்டு மக்களை உங்கள் தொல்லைக்காட்சிகளை காட்டி வீணாக்கத்தானே? வண்ணப்பெட்டி கெட்டு தெருவிற்கு வரும் முன் பல தெருச்சண்டை நிகழ்ந்துவிட்டதே!
No comments:
Post a Comment