Monday, July 9, 2007

புரட்சிதமிழர்!

உழுது உழைத்து வண்டி வண்டியாய் நெல்லை குவிக்கும் கூலி விவசாயிகளுக்கு உன்னச் சோறில்லை.
ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும் உழைத்து கோடிக்கணக்கில் உற்பத்தி செய்து குவிக்கும் தொழிலாளிக்கு உரிமையில்லை. உண்மையான ஊதியமில்லை.
விண்னைமுட்டும் கட்டிடங்களை எழுப்புபவனுக்கு அவற்றின் நிழலில்கூட இடமில்லை.
விதவிதமாய் துணிகளை நெய்யும் நெசவாளிக்கு உடுத்த துணியில்லை, ஏன் இந்த அநீதி? பெற்றவளுக்கே பிள்ளை சொந்தமில்லை என்பது என்ன நீதி?
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் கூலி விவசாயிகளை சுரண்டிச் சேர்த்த பண்ணையார்கள், நிலபிரபுக்களின் நிலமும் சொத்தும் பரம்பரை சொத்து, முன்னோர்கள் செய்த புண்ணியம் என்று நயவஞ்சகமாய் நியாயப்படுத்தப்படுகிறது.
ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டிச் சேர்த்த முதலாளிகளின் சொத்துக்கள் முதல் போட்டு சம்பாதித்தது உழைத்து சேர்த்தது என்று மோசடியாய் நியாயப்படுத்தப்படுகிறது.
ஊதியம் கொடுக்காமல் திருடப்படும் உழைப்புதான் முதலாளிகளின் மூலதணம், நிலபிரபுக்களின் நிலம் சொத்து சுகவாழ்வு. யுகம் யுகமாய் தொடரும் இந்த சுரண்டலை, ஏற்றத்தாழ்வை, அநீதியை அடிமைத்தனத்தை ஒழித்துக்கட்ட இன்று வேகமாய் படர்ந்து வரும் அந்நியச் சுரண்டலை அழித்து ஒழிக்க
உழுபவனுக்கே நிலம், உழைப்பவனுக்கே அதிகாரம் என்ற புதிய சமூகநீதியை நிலைநாட்ட உழைக்கும் மக்களின் விடுத்தலைக்காக போரிட்டு மடிந்த தியாகிகளின் சாம்பலில் இருந்து பீணிக்சு பறவைகளாய் சிறகடித்து சீறி வருகிறது புரட்சிதமிழர் கட்சி.

No comments: