Monday, July 9, 2007

உறுதி!


எத்தனை முறை என்னை சிறையிலிட்டாலும் என் கொள்கை மாறாது!

ஒரு பித்தனை ஆண்டியை போல் எந்தன் உள்ளமும் பேதமை கூறாது!

அரசனே எதிர்த்தாலும் அதிகாரம் பனித்தாலும் அச்சம் என் நெஞ்சில் இல்லை!

ஒரு முரசினை போலவே கொள்கையை முழக்குவேன் மூச்சிலும் கெஞ்சல் இல்லை!


உரசி என் உடலினை பாறையில் தேய்த்தாலும் உறுதியோ குலைவதில்லை
உரசி என் உடலினை பாறையில் தேய்த்தாலும் உறுதியோ குலைவதில்லை

தமிழ் அரசினை நிறுவவே உன்கிறேன் உடுக்கிறேன் அது வரை சோர்வதில்லை, நான் அது வரை சோர்வதில்லை!

2 comments:

winner said...

உங்களிடம் காணப்படும் எழுத்தார்வம் கண்டு மகிழ்ச்சி.

உங்கள் எழுத்தின் உண்மைகளின் வெளிபாடுகளாக இருக்க வழிவகைச் செய்யுங்கள்

தோழமையுடன் அருண்

Unknown said...

அருமை